/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/எடைப்பணி தொழிலாளர்கள் சங்கத்தினர் 16ல் உண்ணாவிரதம்

எடைப்பணி தொழிலாளர்கள் சங்கத்தினர் 16ல் உண்ணாவிரதம்

ADDED : ஆக 04, 2010 03:22 AM


Google News

திருக்கோவிலூர்:பணி நிரந்தரம் செய்யக் கோரி மாவட்ட தலைநகரங்களில் எடைப் பணி தொழிலாளர்கள் சார்பில் வரும் 16ம் தேதி உண்ணாவிரதம் நடக்கிறது.தமிழ்நாடு ஒழுங்குமுறை விற்பனைக்கூட எடைப் பணி தொழிலாளர் சங்கத்தின் மாநில செயற் குழு கூட்டம்  விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் நடந்தது.

மாநில தலைவர் பாலக்கண்ணன் தலைமை தாங்கினார். துணை செயலாளர் மாரிமுத்து முன்னிலை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் சரவணன் சிறப்புரையாற்றினார்.ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில்  பணியாற்றும் எடைப் பணி தொழிலாளர்களை காலமுறை ஊதியத்தில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பணி செய்ய இயலாத எடைப்பணி தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். பணியின் போது இறக்கும் தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கலெக்டர் அலுவலகங்கள் முன்பு வரும் 16ம் தேதி குடும்பத்தோடு உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



உங்கள் மாவட்ட தொகுதிகளின் முழுமையான தேர்தல் தகவல்களை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்