பொள்ளாச்சி : பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய எஸ்.எஸ்.ஏ., சார்பில் நடந்த மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில் 105 பேர் பங்கேற்றனர்.மாற்று திறனாளிகள், அரசின் பல்வேறு திட்டத்தின் கீழ் சலுகைகள் பெற வசதியாக சிறப்பு முகாம் நடத்தப்பட்டு அடையாள அட்டை வழங்கப்படுகிறது.
இதில், 18 வயதிற்குட்பட்டு 53 ஆண்களும், 28 பெண்களும், 18 வயதிற்கு மேற்பட்டு 12 ஆண்கள், 12 பெண்கள் பங்கேற்றனர்.முகாமில், பங்கேற்றவர்களுக்கு அரசு மருத்துவமனை டாக்டர்கள், பரிசோதனை செய்தனர். கண் குறைபாடுடன் 10 பேரும், காது கேளாமல் 20 பேரும், கை, கால் ஊனமுற்ற 41 பேரும், மன நலம் பாதிக்கப்பட்ட 34 பேரும் அடையாள அட்டை கேட்டு வந்திருந்தனர். டாக்டர்கள் பரிசோதனைக்கு பின், போட்டோ எடுக்கப்பட்டு, 25 பயனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. அடுத்தகட்டமாக, பொள்ளாச்சி தெற்கு, ஆனைமலை ஒன்றியங்களுக்குட்பட்ட மாற்று திறனாளிகளுக்கான முகாம் நடக்கவுள்ளது. முகாமில், பங்கேற்கும் பயனாளிகள், இரண்டு போட்டோவுடன் முகாமிற்கு வர வேண்டும். காலை 9.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை முகாம் நடக்கும். இதில், டாக்டர்கள் பரிசோதனை செய்தவுடன், பயனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கப்படும் என, எஸ்.எஸ்.ஏ., அதிகாரிகள் தெரிவித்தனர்.முகாமில், எஸ். எஸ்.ஏ., வட்டார வள மைய மேற்பார்வையாளர் பழனிசாமி, ஆசிரிய பயிற்றுனர்கள், சிறப்பு ஆசிரியர்கள் ஜெயபிரகாஷ், யுவராணி உட்பட பலர் பங்கேற்றனர்.


