/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/அகல ரயில்பாதை பணியை விரைவுபடுத்த வர்த்தக சபை வலியுறுத்தல்

அகல ரயில்பாதை பணியை விரைவுபடுத்த வர்த்தக சபை வலியுறுத்தல்

ADDED : ஆக 04, 2010 03:20 AM


Google News

பொள்ளாச்சி : 'பொள்ளாச்சி - திண்டுக்கல் - பாலக்காடு - போத்தனூர் வழித்தடத்தில் நடக்கும் அகல ரயில்பாதை பணியை விரைவில் நிறைவு செய்ய வேண்டும்' என, தொழில்வர்த்த பை கோரிக்கை விடுத்துள்ளது.

பொள்ளாச்சி தொழில்வர்த்தக சபையின் ஆண்டு விழா நடந்தது. துணைத்தலைவர் வெங்கடேஷ் வரவேற்றார். தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.கூட்டத்தில், பொள்ளாச்சி தொழில் வர்த்த சபை சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் வர்த்தக கண் காட்சி இந்தாண்டு வரும் டிசம்பர் மாதம் நடத்துவது, கோவை மாவட் டத்திலிருந்து பிரித்து புதிதாக திருப்பூர் மாவட்டம் உருவாக்கப் பட்டுள்ளது. திருப்பூரில் இருந்து வந்த மாவட்ட பதிவாளர் அலுவலகம் இனி பொள்ளாச்சிக்கு மாற்றம் செய்ய வேண்டும். இது குறித்து அரசின் பதிவுத்துறைக்கு வலியுறுத்த வேண்டும்.சுற்றுலாத்துறையின் சார்பில் அதிக பிரபலமடையாத சுற்றுலா மையமாக பொள்ளாச்சியை அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது. விரைவில், இங்கு சுற்றுலா மைய அலுவலகத்தை துவங்க வேண்டும்.பொள்ளாச்சி - திண்டுக்கல் - பாலக்காடு - போத்தனூர் வழித்தடத் தில் நடக்கும் அகல ரயில்பாதை பணியை விரைவில் நிறைவு செய்ய வேண்டும். பணிக்கான நிதியை மத்திய அரசு உடனடியாக ஒதுக்க வேண்டும்.



கோட்டூர் ரோட்டில் கட்டப்படும் ரயில்வே மேம்பால பணியை விரைவுபடுத்தி முடிக்க வேண்டும். கோவை மாவட்டத்தின் தலைமை அரசு மருத்துவமனையாக பொள்ளாச்சி அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அதற்கேற்ப உள்கட்டமைப்பு வசதிகளும், டாக்டர்களும், அலுவலர்களும் இல்லை. இதற்கான அலுவலகம் கோவையில் செயல்படுகிறது.தரம் உயர்த்தப்பட்ட மருத்துவமனைக்கு, பழைய நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி இடத்தை வழங்க வேண்டும். இதில், கார்களை பார்க்கிங் செய்ய தரை தளத்தில் வசதி ஏற்படுத்த வேண்டும்.பொள்ளாச்சி நகரில், மக்கள் தொகை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ஆனால், ரோடுகள் மிகவும் மோசமான நிலையிலுள்ளது. குடிநீர் குழாய் மற்றும் தொலைபேசி இணைப்புக்காக தோண்டப்பட்ட குழிகள் மூடாததால், ரோடு குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.இந்த ரோட்டில் செல்பவர்கள் தினமும் விபத்துக்குள்ளாகும் நிலை மை உள்ளது. நெடுஞ்சாலைத்துறையினரும், நகராட்சி அதிகாரிகளும் ரோட்டை சீரமைத்து தரவும், போலீசார் போக்குவரத்தை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழில்வர்த்தகசபைக்கு புதிதாக கட்டடம் கட்டுவது என்பது உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. கூட்டத்தில், புதிய நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. தலைவராக கோபாலகிருஷ்ணனும், பொருளாளராக சந்திரன், செயலாளராக கண்ணன் ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர். தேர்தல் அதிகாரியாக சேதுபதி செயல்பட்டார். பொருளாளர் சந்திரன் வரவு - செலவு அறிக்கையையும், செயலாளர் கண்ணன் ஆண்டறிக்கை வாசித்தனர். இணை செயலாளர் நாகமாணிக்கம் நன்றி கூறினார்.



உங்கள் மாவட்ட தொகுதிகளின் முழுமையான தேர்தல் தகவல்களை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்