/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வக்கம்பாளையம் பள்ளியில் மாணவர் சேர்க்கை துவக்கம்

வக்கம்பாளையம் பள்ளியில் மாணவர் சேர்க்கை துவக்கம்

ADDED : ஆக 04, 2010 03:19 AM


Google News

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அடுத்த வக்கம்பாளையம் துவக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தியதையொட்டி விழா நடந்தது.

பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம் வக்கம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு, நடப்பாண்டு முதல் மாணவர் சேர்க்கை நடக்கிறது. இதையொட்டி, பள்ளியில் விழா நடந்தது. ஊராட்சி தலைவர் மோகனாம்பாள் தலைமை வகித்தார். ஒன்றியக்குழு தலைவர் தனலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் வளநாட்டுத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவையொட்டி, ஆறாம் வகுப்பிற்கான மாண வர் சேர்க்கை துவங்கியது. இதில், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.



உங்கள் மாவட்ட தொகுதிகளின் முழுமையான தேர்தல் தகவல்களை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்