/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வால்பாறையில் மரம் வெட்டுவதற்கு தடை விதிக்க அ.தி.மு.க., கோரிக்கை

வால்பாறையில் மரம் வெட்டுவதற்கு தடை விதிக்க அ.தி.மு.க., கோரிக்கை

ADDED : ஆக 04, 2010 03:18 AM


Google News

வால்பாறை : வால்பாறையில் மரம் வெட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அ.தி.மு.க.,கோரிக்கை விடுத்துள்ளது.அ.தி.மு.க., வால்பாறை சட்டசபை தொகுதி செயலாளர் அமீது மாவட்ட கலெக்டரிடம் கொடுத்த மனு:இயற்கை வளம் நிறைந்த வால்பாறையில் சுற்றுலாப்பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.

சமீபகாலமாக எஸ் டேட் பகுதிகளில் மரம் வெட்டப்படுவதால் இயற்கை வளம் பாதிக்கப்பட்டு, வனவிலங்குகள் போதிய உணவு கிடைக் காமல் குடியிருப்பு பகுதிக்குள் தஞ்சமடைந்துள்ளன.குறிப்பாக காட்டுயானை, சிறுத்தை போன்ற கொடிய வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து மனித உயிர்களை வேட்டையாடி வருகின்றன. இதனால் மக்கள் நிம்மதியிழந்து தவிக்கின்றனர். வால்பாறையின் இயற்கைக்கும், வனவிலங்குகளுக்கும் பாதுகாப்பாக உள்ள மரங்களை வெட்டப்படுவதை தடுக்க வேண்டும். எஸ்டேட் பகுதிகளில் கூடுதல் மரங்களை நட வேண்டும்.இயற்கை வளத்தை பாதுகாக்க வேண் டிய அதிகாரிகளே மரத்தை வெட்ட அனுமதி கொடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார்.



உங்கள் மாவட்ட தொகுதிகளின் முழுமையான தேர்தல் தகவல்களை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்