/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/செண்டூர் கிராமத்தில் ஆடிப்பெருக்கு விழா

செண்டூர் கிராமத்தில் ஆடிப்பெருக்கு விழா

ADDED : ஆக 04, 2010 03:18 AM


Google News

மயிலம்:மயிலம் அடுத்த செண்டூரில் ஆடிப்பெருக்கு திருவிழாவை முன்னிட்டு  வள்ளி தெய்வானை சுப்ரமணிய சுவாமி தீர்த்த வாரி நடந்தது.ஆடிப்பெருக்கை முன் னிட்டு  நேற்று மதியம் 12 மணியளவில் மயிலம் வள்ளி தெய்வானை சுப்ரமணிய சுவாமி மயிலம் மலைக் கோவிலிலிருந்து புறப்பட்டு செண்டூர் கிராமத்திற்கு சென்று அங் குள்ள தொண்டி ஆற்றில் சுவாமிக்கு தீர்த்த வாரி நடந்தது.பின்னர் மாலை 6 மணியளவில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.

சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சுற்றுப்புற கிராம மக்கள்  ஏராளமானோர் சுவாமியை தரிசித்தனர்.  செண்டூர் கிராமத்தில் இரவு சுவாமி வீதியுலா சென்று மீண்டும்  கோவிலை வந்தடைந்தது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.



உங்கள் மாவட்ட தொகுதிகளின் முழுமையான தேர்தல் தகவல்களை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்