/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/வேக கட்டுப்பாடு கருவி பொருத்த ஆர்.டி.ஓ., வேண்டுகோள்

வேக கட்டுப்பாடு கருவி பொருத்த ஆர்.டி.ஓ., வேண்டுகோள்

ADDED : ஆக 01, 2010 03:46 AM


Google News

தர்மபுரி: 'கல்வி நிறுவன வாகனங்களில் வேக கட்டுப்பாடு கருவிகளை கட்டாயம் பொருத்த வேண்டும்' என போக்குவரத்து அலுவலர் எச்சரித்துள்ளார்.

கல்வி நிறுவன வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாவதால் மாணவர்கள் பலர் காயமடைகின்றனர். இந்த விபத்துக்களில் பச்சிளம் குழந்தைகள் காயமடைவது அதிகரித்து வருகிறது. இதை தடுக்க கல்வி நிறுவன வாகனங்களில் வேக கட்டுப்பாடு கருவிகளை பொருத்த வேண்டுமென்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை பல கல்வி நிறுவனங்கள் பின்பற்றவில்லை. வேக கட்டுப்பாடு கருவி பொருந்தாத கல்வி நிறுவன வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.



ஆர்.டி.ஓ., (பொ) பாலசுப்பிரமணியம் கூறியதாவது: தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவன வாகனங்களிலும் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. பல கல்வி நிறுவனங்கள் தங்களது வாகனங்களில் இந்த கருவியை பொருத்தவில்லை. கல்வி நிறுவனங்கள் வேக கட்டுப்பாட்டு கருவியை துரிதமாக பொருத்த வேண்டும். இன்று (ஆக., 1 ) முதல் அனைத்து வாகனங்களிலும் சோதனை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.



உங்கள் மாவட்ட தொகுதிகளின் முழுமையான தேர்தல் தகவல்களை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்