Dinamalar-Logo
Dinamalar Logo


/பிற மாநில தமிழர்/பிற மாநிலம்/போரில்லாத உலகம் அமைய... உலக அமைதித் தூதர் குரு மகான் அழைப்பு

போரில்லாத உலகம் அமைய... உலக அமைதித் தூதர் குரு மகான் அழைப்பு

போரில்லாத உலகம் அமைய... உலக அமைதித் தூதர் குரு மகான் அழைப்பு

போரில்லாத உலகம் அமைய... உலக அமைதித் தூதர் குரு மகான் அழைப்பு

அக் 05, 2024


Latest Tamil News
போரில்லாத உலகம் அமைய பாடுபடுமாறு உலகத் தலைவர்களுக்கு, உலக அமைதித் தூதர் குரு மகான் அழைப்பு விடுத்துள்ளார்.

குருமகான் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:


போர் என்பது தனிபட்ட இரு நாடுகளின் விருப்பு வெறுப்பு மட்டுமல்ல் போர்களின் மூலம் பஞ்ச பூதங்களும் பாதிக்கப்படுகிறது. பஞ்ச பூதங்களின் பாதிப்பினால் உலக உயிர்கள் அனைத்தும் பாதிக்கப்படுகின்றன. போரினால் மற்றவர்களை விட சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு ஏற்படும் இழப்பு என்பது மிகவும் அதிகம். ஏற்கனவே நடந்த பல போர்களினால் ஏற்பட்ட இழப்புகளில் இருந்து எந்த ஒரு நாடும் மீளவில்லை. போரின் விளைவுகள் குறித்து தெரிந்தும் ஏன் நாடுகள் போரில் ஈடுபடுகின்றனர் என்பது இதுவரை புரியாத புதிராக உள்ளது.


எவ்வளவு பெரிய நாடாக இருந்தாலும் உணர்ச்சிகளின் வசமாகவே இருந்து முடிவுகள் எடுக்கப்படுகிறது. முடிவு எடுக்கும் முன் அந்த மனம் ஒரு நிமிட அமைதி காத்து, சிந்தித்து, அந்த அமைதியை உணர்ந்து, அதன் மூலம் முடிவுகள் எடுக்கப்படுமாயின் அந்த முடிவுகள் நல்லனவாக அமையும். போர் ஏற்படும் சூழலையும் மாற்றி அமைத்து விடும். அமைதியான சூழலில் எடுக்கப்படும் முடிவுகள் யாரையும் சார்ந்தோ, யாரையும் எதிர்த்தோ இருக்காது. அது தேச நலத்துடன் கூடிய உலக நலத்திற்கான முடிவாக இருக்கும்.


மனம் அமைதியடையும் போது எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் சரியான முடிவை எடுக்கும். யுத்தத்தை ஏற்படுத்துவதும், தவிர்ப்பதும் ஒரு நிமிட அமைதியில் இருக்கிறது. உலகை சரிசெய்யும் பணி ஒரு நிமிட அமைதி கொடுக்கின்றது என்றால் மிகையாகாது. விண்கதிர்கள், வால்நட்சத்திரம் மற்றும் இயற்கையின் பேரிடர்களால் புவி பாதிக்கப்பட உள்ளது. மேலும் உயிரினங்களில் ஆறறிவு படைத்த மனிதனைத் தவிர, எந்த ஒரு உயிரினமும் தன் இனத்தை அழிப்பதில்லை. சிந்திப்போம். தேவையா போர்கள் என்று சிந்தித்து உலக உயிர்கள் அனைத்தையும் பாதுகாப்பது நமது கடமை என்பதை உணர்ந்த நிலைகளில் இணைந்து செயல்படுவோம்.


எனவே உலகத் தலைவர்கள் தாங்கள் எடுத்த மற்றும் எடுக்கப்போகின்ற முடிவுகளும் சரியானதா என்பதை உணர “ஒரு நிமிட” அமைதி காத்து தாங்களும் அமைதி அடைந்து உலகில் எங்கும் அமைதியும்இ சந்தோசமும் நிலவச் செய்ய பரிபூரண நல்லாசிகள்.


சந்தோஷம்


- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்






      Our Apps Available On




      Dinamalar

      Follow us