Dinamalar-Logo
Dinamalar Logo


/பிற மாநில தமிழர்/பிற மாநிலம்/புனித காசியில் கோரி பார்த்திப சிவ லிங்கார்ச்சனை கோலாகலம்

புனித காசியில் கோரி பார்த்திப சிவ லிங்கார்ச்சனை கோலாகலம்

புனித காசியில் கோரி பார்த்திப சிவ லிங்கார்ச்சனை கோலாகலம்

புனித காசியில் கோரி பார்த்திப சிவ லிங்கார்ச்சனை கோலாகலம்

நவ 25, 2024


Latest Tamil News
ஸ்ரீ சம்ப சதாசிவ மகா தேவா சமதி சார்பாக வாரணாசி சேத்திரத்தில் சத்குரு டாக்டர் பிரம்மஸ்ரீ சாம வேத ஷண்முக சர்மா அருளால் புனித கங்கைக் கரையில் உள்ள முழுக்ஷபவன் வளாகத்தில் ஸ்ரீ காசி விஸ்வநாத நிமித்தம் சரஸ்வதி வாக்வி வரபுத்ர புதிய வாகனமாக கோரி பார்த்திவ சிவ லிங்கார்ச்சனை நவம்பர் 4 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை வெகு விமரிசையாக நடைபெற்றது.
காலை 6 மணி முதல் 3.30 வரை லட்ச வில்வார்ச்சனை, மஹான் யாச ஏகாதச ருத்ராபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றன. மாலை 6.15 மணிக்கு மஹா ஆரத்தி, 7 மணி முதல் திருமண உற்சவம் மற்றும் தீர்த்தப் பிரசாதம் வழங்குதல், மஹா கணபதி பூஜை, பார்வதி சாந்தி கல்யாணோத்ஸவம், மங்கள சண்டிகா பூஜை, மகா லிங்கார்ச்சனை மெய் சிலிர்க்க நடைபெற்றன. ரதோற்சவம், ஸ்ரீ சுவர்ச்சலா சமேத ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி சாந்தி கல்யாணோற்சவம் கண்குளிர நடைபெற்றன.

சிங்கப்பூர் ஸ்ரீ ராமர் ஆலயத் தலைமை அர்ச்சகர்


நவம்பர் 11, 12, 13 ஆம் தேதிகளில் இவ்வைபவத்தில் வைகாணஸ ஆகமப் பண்டித மேதை சிங்கப்பூர் சாங்கி ஸ்ரீ ராமர் ஆலயத் தலைமை அர்ச்சகர் வைகாணஸ யஷோ பூஷணம் அம்மன்குடி வெ.ஸ்ரீநிவாச பட்டாச்சார்யார் சேவை பெரிதும் பாராட்டப்பட்டது. வைகாணஸ ஆகம முறைப்படி ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமிக்கு { தாத்ரி நாராயண } சாந்தி கல்யாணோற்சவம், ரித்விக் சன்மனம், லட்சுமி சகஸ்ரநாம ஹோமம், ஸ்ரீ ஆஞ்சநேய மூலமந்திர ஹோமம், 7 சாஸ்திரிகளைக் கொண்டு நடத்தப்பட்டது.


ஹைதராபாத்திலிருந்து வரவழைக்கப்பட் 18 வேத பண்டிதர்களைக் கொண்டு கும்பாபிஷேகம் கோலாகலமாக பக்தர்களைப் பரவசப்படுத்துமாறு நடத்தப்பட்டது. 1008 லிங்கத் திருவுருவத்தின் பின்னால் காஞ்சி ஸ்ரீ ஆச்சார்யாள் மஹா பெரியவா திருவுருவப் படம் ஜெகச்ஜோதியாகப் பிரகாசித்துக் கொண்டிருந்தமை ஆச்சார்யாளே ஆசி வழங்குவது போல் ஜொலித்தது.


மண்ணால் செய்யப்பட்ட ஒரு கோடி லிங்கம் புனித கங்கா தேவியில் கரைத்ததிலும் இவர் பங்கு பெற்றார். மங்கள ஹாரத்தி, தீர்த்தப் பிரசாதம் வழங்குவதிலும் பிரதானப் பங்கு பெற்றமை குறிப்பிடத் தகுந்தது. புனிதச் சேத்திரமாம் காசியிலிருந்து திரும்பிய தலைமை அர்ச்சகர் நமது செய்தியாளரிடம் பேசுகையில் தமது வாழ்நாளில் இது ஒரு மகத்தான வைபவம் என உருக்கத்தோடு உரைத்தார்.


_ நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்






      Our Apps Available On




      Dinamalar

      Follow us