Dinamalar-Logo
Dinamalar Logo


/பிற மாநில தமிழர்/பிற மாநிலம்/ஐதராபாத் ஐக்கிய தமிழ் மன்றத் தமிழ் புத்தாண்டு சித்திரை திருநாள் கொண்டாட்டம்

ஐதராபாத் ஐக்கிய தமிழ் மன்றத் தமிழ் புத்தாண்டு சித்திரை திருநாள் கொண்டாட்டம்

ஐதராபாத் ஐக்கிய தமிழ் மன்றத் தமிழ் புத்தாண்டு சித்திரை திருநாள் கொண்டாட்டம்

ஐதராபாத் ஐக்கிய தமிழ் மன்றத் தமிழ் புத்தாண்டு சித்திரை திருநாள் கொண்டாட்டம்

ஏப் 18, 2023


ஐக்கிய தமிழ் மன்றத்தின் தமிழ் புத்தாண்டு சித்திரை திருநாள் கொண்டாட்டம், ஏப்ரல் 16, ஞாயிறு அன்று ஹைதராபாத், நாதர்குல் YPR எஸ்டேட்ஸ் சோலையில் மிக சிறப்பான தமிழ் கலாச்சார திருவிழாவாக கொண்டாடப் பட்டது.

பானை உடைத்தல், சிலம்பாட்டம், கயிறு இழுத்தல், பாடல், குழந்தைகள் நடனம், குழந்தைகளுக்கான பிரத்யேக ஓவியப் போட்டி, குழந்தைகள், சிறுவர்கள், ஆண்கள், பெண்கள் என ஒவ்வொருவருக்குமான தனி தனி சிறப்பு போட்டிகள், தம்போலா, புத்தாண்டு அதிர்ஷ்ட குலுக்கல், பொக்கிஷ வேட்டை, மதிய உணவு விருந்து, இடையிடையே குளிர் மோர், சத்துமாவு பால் மற்றும் மேலும் பல நிகழ்வுகள் என நாள் முழுவதும் சுமார் 170 க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் குடும்பமாய் கூடி, குதூகலித்து மகிழ்ந்தனர்.

தெலுங்கு தலைநகரில் இருக்கும் உணர்வு மறைந்து, ஒரு தமிழ் கிராமத் திருவிழாவில், பசுமையான சூழலில், விலங்குகள், பறவைகள் மற்றும் உற்றார் உறவினருடன் ஆடிப் பாடி மகிழ்ந்த உணர்வுடன், கை நிறைய பரிசுப் பொருட்களுடன், நீங்காத நினைவுகள் நெஞ்சில் சுமந்து வீடு திரும்பினர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஜெயலட்சுமி மணிகண்டன், நிர்மலா ரவிசங்கர், செல்லம், குணசேகர், வெங்கடேசன், முரளி, தம்பிதுரை, மணிகண்டன், சிந்தியா, யுவராஜ் மற்றும் மேலும் பலர் ஒன்றிணைந்து மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

ஐக்கிய தமிழ் மன்றத்தில் உறுப்பினராக இணைய 9894144245 மற்றும் 9848411712 என்ற வாட்ஸாப்பில் எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

இணைய வழியில் உறுப்பினராக:

 https://forms.gle/DSYYzbMX6nroPwBV6





      Our Apps Available On




      Dinamalar

      Follow us