/பிற மாநில தமிழர்/பிற மாநிலம்/நாசிக் தமிழ் சிவன் கோவில் சிவராத்திரிநாசிக் தமிழ் சிவன் கோவில் சிவராத்திரி
நாசிக் தமிழ் சிவன் கோவில் சிவராத்திரி
நாசிக் தமிழ் சிவன் கோவில் சிவராத்திரி
நாசிக் தமிழ் சிவன் கோவில் சிவராத்திரி
பிப் 28, 2025

மகா சிவராத்திரியை முன்னிட்டு நாசிக் நகரில் கோதாவரி நதிக்கரையில் அமைந்துள்ள பஞ்சவடியில் உள்ள சிவன் கோவிலில் தமிழர்கள் ஒன்றாய் கூடி கொண்டாடினர். இந்த சிவன் கோவிலில் நமது தமிழ் முறைப்படி பூஜைகள், பால், சந்தனம் உள்ளிட்ட அனைத்து அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் தீபாராதனை நடைபெற்றது. சிவராத்திரி முழுக்க தொடர்ந்து தீபாராதனை, வழிபாடுகள் நடைபெற்றன.
இந்த கோவில் சிறியதாக இருந்தாலும் இதன் கீர்த்தி மிகப்பெரிது. இதனை நாட்டுக்கோட்டை நகரத்தார் நிர்வாகக்குழு மிகச்சிரத்தையோடு ஆன்மிகப் பணியினை செய்து வருகின்றனர்.
- நமது செய்தியாளர் பா.ஸ்ரீதர்