/பிற மாநில தமிழர்/புதுடில்லி/உத்திர சுவாமி மலை மந்திரில் வைகாசி விசாகம் கோலாகலம்உத்திர சுவாமி மலை மந்திரில் வைகாசி விசாகம் கோலாகலம்
உத்திர சுவாமி மலை மந்திரில் வைகாசி விசாகம் கோலாகலம்
உத்திர சுவாமி மலை மந்திரில் வைகாசி விசாகம் கோலாகலம்
உத்திர சுவாமி மலை மந்திரில் வைகாசி விசாகம் கோலாகலம்
மே 23, 2024

புது தில்லி : ஆர். கே. புரம் உத்திர சுவாமி மலை மந்திரில் வைகாசி விசாகம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கோவில் நடை அதிகாலையிலேயே திறக்கப்பட்டு, சுவாமிநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சுப்பிரமண்ய ஹோமம் நடந்தன. அதைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சுவாமி, பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து ஊர்வலமாக வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
பங்குனி உத்திரம், தை பூசம், கார்த்திகை மாத கார்த்திகை நட்சத்திரத்தை போல, வைகாசி மாத விசாகம் முருகப்பெருமானுக்கு உகந்த நாளாகும். ஆறுமுகன் அவதரித்த இந்த பௌர்ணமியுடன் கூடி வரக்கூடிய வைகாசி விசாக நட்சத்திரம் ஆகும். இந்த வைகாசி விசாக தினத்தில் ஆறுமுகன் அவதரித்த நாளாக கொண்டாடப்படும் இந்த தினத்தில் நாம் விரதம் இருந்து வழிபாடு செய்தால் நமக்கு முருகனின் அருளும், நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்