
புதுடில்லி : துவாரகா ஸ்ரீ ராம் மந்திரில் சஷ்டியையொட்டி திருப்புகழ் அன்பர்கள் திரளாக பங்கேற்று அருணகிரிநாதர் அருளிய திருப்புகழை மனமுருகிப் பாடினர்.
திருப்புகழை தேவாரம், திருவாசகம் போல் மந்திர நூலாகவும், நாள்தோறும் இறைவனைப் போற்றிப் புகழ்பாடும் நூலாகவும், முருகன் மீது பக்தி கொண்டோர் பின்பற்றும் நூலாகவும் கொள்கின்றனர். திருப்புகழில் உள்ள இசைத்தாளங்கள், இசை நூல்கள் எதிலும் அடங்காத தனித்தன்மை பெற்றவை.
- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்