Dinamalar-Logo
Dinamalar Logo


/பிற மாநில தமிழர்/புதுடில்லி/ராட்டினத்தின் இசை.. காந்திஜியின் பார்வையில்..

ராட்டினத்தின் இசை.. காந்திஜியின் பார்வையில்..

ராட்டினத்தின் இசை.. காந்திஜியின் பார்வையில்..

ராட்டினத்தின் இசை.. காந்திஜியின் பார்வையில்..

மே 01, 2024


Latest Tamil News
தலைநகர் தில்லியில் லோக்கலாமஞ்ச் வாசுகி அரங்கில் மேற்படி தலைப்பில் ஹிந்துஸ்தானி இசை நிகழ்ச்சி ஏப்ரல் 20 தேதி மாலை நடைபெற்றது.

ரமா சுந்தர் ரங்கநாதன் இசைக்கு உஸ்தாத் அக்தர் ஹாசன் தபலா , லலித் சிசோடியா ஹார்மோனியம் வாசித்தார். இந்நிகழ்வு காந்தியின் பார்வையில் ராட்டினம் நூற்பது அதில் எழும் இசை நயம் என்ற நோக்கில் தொடுக்கப்பட்டு இருந்தபடியால் பிரசாத் குமார் இசை குழுவுடன் ராட்டையில் நூல் நூற்றது மிகவும் ரசிக்கும்படியாக இருந்தது.


காந்திஜி தன் வாழ்நாளில் ராமனின் வாழ்க்கையை அவர் வாழ்ந்து காட்டிய பாதையை பின்பற்றியது அவர் சரித்திரம் மூலம் அறிந்துள்ளோம்.

ராமர் தன் வாழ்நாளில் காட்டிய கடைபிடித்த படிப்பினைகள் அளவிட முடியாது.அதிலிருந்து காந்திஜி இரண்டை முதன்மையாகக் கொண்டார் . ஒன்று சத்யம் இரண்டாவது சகோதரத்துவம்.அனைவரும் சமம் என்ற பார்வை.

இதன் பின்னணியில் துளசி தாசரின் வரிகளில் சத்யமூலுச ..என்ற இடத்தில் அழுந்த சொல்லி கர்ம கரோ என்ற பாடல் வரிகள் தொடர்கிறது.


அடுத்து ராமரின் வாழ்க்கையில் சகோதர பாசத்தை காட்டும் பல இடங்களை நாம் அறிவோம்.
ராமர் இலக்குவன், ராமர் விபீஷணன், ராமர் அனுமன்..இவற்றிற்கெல்லாம் மேலான உறவு குகனுடன் கொண்டது.குகனை அணைத்து ஐவரானோம் என்னும் இடம் கம்பராமாயணத்தில் சிறப்பானது.அம்ரி தும்லுனு ராஜுனு.... மிகவும் நெஞ்சில் பதிந்த இடம்.

காந்திஜி ராமரை தசரதர் மகனாகவோ அயோத்தி மன்னராகவோ பார்க்க வில்லை.சத்யத்திற்கு கட்டுப்பட்டு வாழ்ந்த உத்தமன் என்று பார்த்தார்.அவரதுவாக்கியம் சத்யமேவ ஜெயதே என்பதை சொல்ல முண்டோப உபநிஷத்திலிருந்து வரிகளை எடுத்து பாடினார்

காந்திஜிக்கு பிடித்த மீரா பஜன் மேரோ மனு ராம ரக்கனகி.... அனைவரும் வாயசைத்து உடன் பாடி மகிழ்ந்தனர். ராம் நாமம் அரங்கை நிரப்பி மனதை வருடியது.


காந்திஜியின் சுதந்திர போராட்டத்தில் முக்கியமான தண்டி யாத்திரையை நினைவு கூர்ந்து மீண்டும் துளசி தாசரின் ரகுபதி ராகவராஜாராம் . இதில் பிற்காலத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு இப்போதுள்ள அமைப்பில் விஷ்ணு திகம்பர் இசையில் கேட்கிறோம்.

அனைவரும் அறிந்த பாடல் தலையசைத்து தாளமிட்டு ரசித்தனர்.


இறுதியாக பாபா புலேர்ஷாவின் காஃபியா எடுத்துக்கொண்டார்.அதில் ராட்டினம் சுற்றும் போது எழும் இசையும் ஒரு பிராத்தனை போல் இருக்கிறது தியானத்திற்கு ஒப்பானது என்னும் பொருள் பொதிந்த வரிகள் இந்த தலைப்பிற்கு ஏற்ற வரிகள் .மிக இனிமையான இசையில் தேசப்பிதாவுடன் நம்மை இயல்பாய் இணைத்த ரமா சுந்தரின் சங்கீத மாலை சிறப்பானது.

கலைஞர்களை லோக்கலாமஞ்ச் சார்பில் மேலாளர் மாரியப்பன் கெளரவித்தார்கள்.

நிகழ்ச்சியை மீனா வெங்கி தொகுத்து வழங்கினார்.


அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்திருந்தார்கள்.

- நமது செய்தியாளர் மீனா வெங்கி




      Our Apps Available On




      Dinamalar

      Follow us