Dinamalar-Logo
Dinamalar Logo


/பிற மாநில தமிழர்/புதுடில்லி/ஶ்ரீ சீதா கல்யாண மஹோத்ஸவம்

ஶ்ரீ சீதா கல்யாண மஹோத்ஸவம்

ஶ்ரீ சீதா கல்யாண மஹோத்ஸவம்

ஶ்ரீ சீதா கல்யாண மஹோத்ஸவம்

ஏப் 08, 2024


Latest Tamil News
புது தில்லி துவாரகா ஸ்ரீ ராம் மந்திர் சார்பில், ஆண்டுதோறும் ஶ்ரீ சீதா கல்யாண மஹோத்ஸவம் இரண்டு நாட்கள் விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் இந்த திருக்கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்படி, ஏப்ரல் 6 - சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு, தோடாய மங்கலத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. இதை தொடர்ந்து, குரு கீர்த்தனை, ஜெயதேவர் அருளிய அஷ்டபதி (1-20) திவ்ய நாம பஜனை நடை பெற்றது. இசை நாடகமாகவும், ராதா கல்யாணங்களில் பாடப்படுவதாகவும் உள்ள அஷ்டபதிகளின் பெருமை இசைக் கலைஞர்களுக்கும் நாட்டியக் கலைஞர்களுக்கும், பஜனைஉற்சவம் செய்வோருக்கும் சாமான்யர்களுக்கும் இஷ்டமான ஒன்று. என். எஸ். கிருஷ்ணன் மற்றும் ஜெ. விக்னேஷ் (மிருதங்கம்) மற்றும் ஆனந்த் (டோல்கி) பக்க வாத்தியம் வாசித்தனர். மாலை 3.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை பஞ்சபதி பூஜை மற்றும் திவ்யநாமம் நடந்தது.


இரண்டாம் நாளான ஏப்ரல் 7 ஞாயிறு காலை 8.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை உஞ்சவிருத்தி மற்றும் சீதா கல்யாணம் நடைபெற்றது. சீதா கல்யாண மஹோத்ஸவ தினத்தன்று பாகவத சம்பிரதாய முறைப்படி, பாலகோகுலம் மற்றும் ராமகிருஷ்ண பாகவதர் குழுவினரால் சீதா கல்யாண வைபவம் நடத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து வசந்த கேளிக்கை, பவளிம்பு மற்றும் ஆஞ்சநேயர் உற்சவமும் நடந்தது. இத்தருணத்தில், சிவன் பூக்கடை நன்கு அலங்கரிக்கப்பட்ட மலர் பந்தல் மேடையை அமைத்தனர்.


சீதா கல்யாண மஹோத்ஸவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஶ்ரீ சீதா கல்யாண வைபவம், அறுசுவை உணவுடன் நிறைவுபெற்றது. விழா ஏற்பாட்டை ஸ்ரீராம் மந்திர் பஜனை மண்டலியின் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

சீதா சல்யாணம்


'சீதா கல்யாண வைபோகமே' என்று ஒவ்வொரு வீட்டின் கல்யாணத்திலும் பாடுவது வழக்கம். சீதாதேவி சாக்ஷாத் மஹா லக்ஷ்மியினுடைய ஸ்வரூபம். சீதை நம்மைப் போல் கர்ப்பத்திலிருந்து பிறக்கவில்லை. ஸ்ரீதேவி, பூதேவி' மஹாவிஷ்ணுவின் இரு சக்திகள், மஹா விஷ்ணுவின் இருதயத்திலேயே ஸ்ரீ தேவி எப்போதும் குடிகொண்டிருப்பதாக புராணங்கள் கூறும். சமுத்திரத்திலிருந்துகடையும் போது ஸ்ரீதேவி வெளிவந்ததாகக் கூறப்படுவாள்.


- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us