/பிற மாநில தமிழர்/புதுடில்லி/நொய்டா கோவில்களில் ஸ்ரீ சங்கடஹர சதுர்த்தி நொய்டா கோவில்களில் ஸ்ரீ சங்கடஹர சதுர்த்தி
நொய்டா கோவில்களில் ஸ்ரீ சங்கடஹர சதுர்த்தி
நொய்டா கோவில்களில் ஸ்ரீ சங்கடஹர சதுர்த்தி
நொய்டா கோவில்களில் ஸ்ரீ சங்கடஹர சதுர்த்தி
மே 27, 2024

நொய்டா, செக்டார் 22 ல் உள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகர் திருக்கோயிலில் ஸ்ரீ சங்கடஹர சதுர்த்தியை ஒட்டி, விநாயகர் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்ட பிறகு சிறப்பாக அலங்கரிக்கப்பட்டார். மாலையில் ஸ்ரீ வரசித்தி விநாயகருக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டது. பிள்ளையாரின் 'மூர்த்தியோ சிறியது, ஆனால் கீர்த்தியோ பெரிது' என்பதும் குறிப்பிடத்தக்கது. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இக்கோவிலுக்கு பக்தர்கள் தரிசனத்திற்காக வந்து கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பக்தர்களுக்கு காலையிலும் மாலையிலும் பிரசாதம் வழங்கப்பட்டது.
அதே போல், நொய்டா, செக்டார் 62, ஸ்ரீ விநாயகா மற்றும் கார்த்திகேயா கோவிலில் கணபதி ஹோமம் காலையில் நடந்தன. மாலையில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்ட பிறகு விநாயகருக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டது. வந்திருந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
அனைத்து பூஜைகளும் ஜெகதீசன் சிவாச்சார்யர், மணிகண்டன் சர்மா, விக்னேஷ் செய்தனர் . முப்பது ஆண்டுகளுக்கு மேலாக பக்தர்களுக்கு சேவை செய்து வரும் இந்த இரு கோயில்களும் வேதிக் பிரச்சார் சன்ஸ்தானால் நிர்வகிக்கப்படுகின்றன.
- நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்