/பிற மாநில தமிழர்/புதுடில்லி/உத்தர ஸ்வாமி மலை மந்திரில் ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்உத்தர ஸ்வாமி மலை மந்திரில் ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்
உத்தர ஸ்வாமி மலை மந்திரில் ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்
உத்தர ஸ்வாமி மலை மந்திரில் ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்
உத்தர ஸ்வாமி மலை மந்திரில் ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்
ஏப் 23, 2024

புது தில்லி இராமகிருஷ்ணாபுரம் உத்தர ஸ்வாமி மலை மந்திரில் ஏப்ரல் 21 மாலை ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண உற்சவம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. காலையில் அனுக்ஞை, மகா கணபதி பூஜையுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, கடஸ்தாபனம் மஹான்யாஸ பூர்வ ஏகாதச ருத்ர ஜபம், ருத்ர ஹோமம், வஸோர்தரா ஹோமம்ஹோமம், சுந்தரேஸ்வரர் மற்றும் தேவி மீனாட்சிக்கு பூர்ணாபிஷேகம், ஆராதனை மற்றும் ஷோடசோபசார பூஜை நடைபெற்றது.
மாலையில் மீனாட்சி- சுந்தரேஸ்வரருக்கு சீர் எடுத்து வரப்பட்டது. அதன் பின்னர், ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், வேத மந்திரங்கள் ஒலிக்க சிறப்பாக நடைபெற்றது. திருக்கல்யாண வைபவத்தை காண ஏராளமான மக்கள் திரண்டு வந்து பக்தி பரவசமடைந்தார்கள்.
இதையடுத்து சுவாமி பிரகார உற்சவம் மற்றும் மஹா ஹாரத்தியுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. கலந்து கொண்ட அனைவருக்கும் மஹா பிரசாதம் வழங்கப்பட்டது.
- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்