புது தில்லி : வியாச பெளர்ணமியை முன்னிட்டு, ஷாலிமார் பாக்கில் அமைந்துள்ள ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவிலில், காலை கணபதி பூஜையுடன், ஸ்ரீவித்யா உபாசகர் எஸ்.கே மூர்த்தி மற்றும் ஜெ. சுவாமிநாத சாஸ்திரிகள் தலைமையில் நிகழ்ச்சி துவங்கியது. ஏற்பாடுகளை கோவில் தலைவர் வி.ஆர். சுவாமிநாதன் செய்திருந்தார்.
அதைத் தொடர்ந்து, சங்கல்பம், புண்யாஹவசனம், கலச ஸ்தாபனம், ருத்ராபிஷேகம், ஏகாதச ருத்ர ஜபம், ஸிவாஷ்டோத்தர ஸத நாமாவளி, ஸ்ரீ ருத்ர நாம த்ரிஸதீ நாமார்ச்சனை நடைப்பெற்றன. ரித்விக்குகள் மற்றும் வேத விற்பன்னர்கள் பலர் இதில் பங்கேற்று பாராயணம் செய்தனர்.
அதைத் தொடர்ந்து, ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம லட்சார்ச்சனை, ஸ்ரீ லலிதா அஷ்டோத்ர சத நாமாவளி, ஸ்ரீ லலிதா த்ரீஸதி நாமாவளி, மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றன. எராளமானோர் பங்கேற்று லட்சார்ச்சனை செய்தனர். இதையடுத்து, வடு, கன்யா, தம்பதி பூஜைகள் நடத்தப்பட்டன. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். மதியம் அன்னதானத்துடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
இனி பிரதி மாதம், நான்காம் ஞாயிற்றுக்கிழமை தோறும், கோவிலில் ஏகதின ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம லட்சார்ச்சனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
- நமது செய்தியாளர் எம்,வி,தியாகராஜன்