/பிற மாநில தமிழர்/புதுடில்லி/நொய்டா முருகன் கோவிலில் சாஸ்தா ப்ரீதி - 2 நாள் பஜனைநொய்டா முருகன் கோவிலில் சாஸ்தா ப்ரீதி - 2 நாள் பஜனை
நொய்டா முருகன் கோவிலில் சாஸ்தா ப்ரீதி - 2 நாள் பஜனை
நொய்டா முருகன் கோவிலில் சாஸ்தா ப்ரீதி - 2 நாள் பஜனை
நொய்டா முருகன் கோவிலில் சாஸ்தா ப்ரீதி - 2 நாள் பஜனை
நவ 13, 2024

ஒவ்வொரு ஆண்டும் போல, இந்த ஆண்டும், ஐயப்ப சீசனில், இரண்டு நாட்கள் விழா, நொய்டா செக்டார் 62 ஸ்ரீ விநாயகா மற்றும் ஸ்ரீ கார்த்திகேயா கோவில் வளாகத்தில் நடைபெறும். நவம்பர் 16, சனிக்கிழமை அன்று, வேதிக் பிரச்சார் சன்ஸ்தான் (வி பி எஸ்), மற்றும் BHEL ஐயப்ப பூஜை ஸமிதி யுடன் இணைந்து, ஸ்ரீ மஞ்சப்ரா மோகன் மற்றும் குழுவினர் வழங்கும் ஐயப்பன் பஜனை களுடன் சாஸ்தா ப்ரீதி நடை பெற உள்ளது.
- நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்
இரண்டாவது பஜனை நிகழ்ச்சி, நவம்பர் 24 ஞாயிற்றுக்கிழமை, ஹம்சத்வனி பஜன் மண்டலி வழங்கும். இந்த நிகழ்ச்சியை ஸ்ரீதர் அய்யர் மற்றும் குடும்பத்தினர், வி பி எஸ் உடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளனர்.
இரண்டு நாட்களிலும், காலை பூஜை, கணபதி ஹோமத்துடன் தொடங்கும், அதனை தொடர்ந்து ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம், ஸ்ரீ ஐயப்பன் ஸஹஸ்ரநாம அர்ச்சனை நடக்க உள்ளன. மேலும், படி பாட்டு, தொடர்ந்து, மகா தீபாராதனை மற்றும் பக்தர்கள் அனைவருக்கும் மகா பிரசாதம் வழங்கப்படும்.
இரண்டு நிகழ்ச்சிகளிலும் பக்தர்கள் நொய்டாவின் பல்வேறு செக்டர்களில் மட்டுமல்லாமல், அண்டை பகுதிகளான டெல்லி, இந்திராபுரம், காஜியாபாத் மற்றும் வைஷாலி பகுதிகளில் இருப்பவர்கள், கலந்து கொள்வார்கள், என கோவில் நிர்வாகம் எதிர்பார்க்கிறது.
- நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்