Dinamalar-Logo
Dinamalar Logo


/பிற மாநில தமிழர்/புதுடில்லி/ஸ்ரீரமண கேந்திரத்தில் சத்சங்கம்

ஸ்ரீரமண கேந்திரத்தில் சத்சங்கம்

ஸ்ரீரமண கேந்திரத்தில் சத்சங்கம்

ஸ்ரீரமண கேந்திரத்தில் சத்சங்கம்

அக் 21, 2024


Latest Tamil News
புதுதில்லி லோதி சாலையில் உள்ள ஸ்ரீ ரமண கேந்திரத்தில் அக்டோபர் 20 மாலை சத்சங்கம் நடைபெற்றது.

கணபதி அதர்வசீர்ஷம், ஸ்ரீ ருத்ரம், சமகம் நமகம், புருஷ ஸூக்தம், ஸ்ரீஸூக்தம் மற்றும் சாந்தி பஞ்சகம் பாராயணத்துடன் தொடங்கியது. கணபதி ஆவாஹனம், கலச பூஜைக்கு பின், ரமண அஷ்டோத்திரம், உபதேச சாரம் பாராயணம் நடந்தது. ரமண கேந்திரா செயலாளர் கணேசன், நொய்டா சின்மயானந்தா மிஷன் சித்ரூபானந்தா சுவாமிஜியை வரவேற்றார்.


பகவான் ஶ்ரீ ரமண மகரிஷி அவர்கள் போதித்தபடி 'ஹிருதய வித்யா' என்ற தலைப்பில் சித்ரூபானந்தா ஸ்வாமிஜி தனது சொற்பொழிவை ஆற்றி, ரமண கீதையின் ஒரு பகுதியான ஹிருதய வித்யா என்றால் என்ன என்று விரிவாக விளக்கினார். 'நான்' என்று இதயத்தின் உள்ளே பிரகாசிப்பது ஆத்மா மற்றும் எல்லா எண்ணங்களுக்கும் ஆதாரமாகவும் முடிவாகவும் இருக்கிறது. அதைப் பற்றி தியானியுங்கள், ஒருவர் உண்மையில் அஹம் அல்லது ஆத்மாவை அனுபவிக்க முடியும், அங்கு எண்ணங்கள் அனைத்தும் எழுகின்றன, அது மட்டுமே இதயம். மனதின் ஆதாரமான 'நான்' என்று எழும் இடத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறினார். சத்சங்கம் ஆரத்தியுடன் நிறைவடைந்து. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.


- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்






      Our Apps Available On




      Dinamalar

      Follow us