/பிற மாநில தமிழர்/புதுடில்லி/ஆர். கே. புரம் உத்திர சுவாமி மலையில் (மலை மந்திர்) மஹன்யாசம்ஆர். கே. புரம் உத்திர சுவாமி மலையில் (மலை மந்திர்) மஹன்யாசம்
ஆர். கே. புரம் உத்திர சுவாமி மலையில் (மலை மந்திர்) மஹன்யாசம்
ஆர். கே. புரம் உத்திர சுவாமி மலையில் (மலை மந்திர்) மஹன்யாசம்
ஆர். கே. புரம் உத்திர சுவாமி மலையில் (மலை மந்திர்) மஹன்யாசம்
டிச 25, 2024

புதுதில்லி ஆர். கே. புரம் உத்திர சுவாமிமலையில் (மலை மந்திர்) காலை மஹன்யாஸ பாராயணம் மற்றும் ஏகாதச ருத்ர ஜபம் மிகவும் விமரிசையாக நடந்தது. தில்லி மற்றும் என். சி.ஆர். சுற்று வட்டார பகுதியில் இருந்து இருபதிற்கும் மேற்பட்ட ரித்விக்குகள் இதில் பங்கேற்று பாராயணம் செய்தனர்.
காலை 7.30 மணிக்கு, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, சங்கல்பம், புண்யாஹவாசனம் மற்றும் கலச ஸ்தாபனம் நடைபெற்றது. 8.30 மணிக்கு மஹன்யாஸ பாராயணம், அதைத் தொடர்ந்து 11 ஆவர்த்தி ஏகாதச ருத்ர ஜபம் பாராயணம், நாமார்ச்சனை நடைபெற்றன. இதையடுத்து, தீபாராதனை காட்டப்பட்டு, பிரசாதம் வழங்கப்பட்டது.
மஹான்யாசம்
அனைத்து அசுத்தங்களிலிருந்தும் உடல், மனம் மற்றும் ஆன்மாவைத் தூய்மைப்படுத்த ஓதப்படுகிறது. இது ஏகாதச ருத்ரம், லகு ருத்ரம், மஹா ருத்ரம் மற்றும் அதி ருத்ரம் போன்ற விசேஷ சமயங்களில் ஸ்ரீ ருத்ரம் சொல்லும் முறையின் ஒரு பகுதியாகும்.
- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்