Dinamalar-Logo
Dinamalar Logo


/பிற மாநில தமிழர்/புதுடில்லி/தலைநகரில் தாய்மொழி தமிழ் படிப்பு

தலைநகரில் தாய்மொழி தமிழ் படிப்பு

தலைநகரில் தாய்மொழி தமிழ் படிப்பு

தலைநகரில் தாய்மொழி தமிழ் படிப்பு

ஜூலை 29, 2024


Latest Tamil News
தில்லி, மயூர் விஹார்-3, தமிழர் நலக் கழகம் நடத்தும் தமிழ் வகுப்பு மாணவமணிகளுக்கான சென்னை, அண்ணா பல்கலைக் கழகத்தின் தமிழ் இணையக் கல்விக் கழகம் நடத்திய தமிழ் ஆரம்ப நிலை, இடைநிலை மற்றும் மேல்நிலைத் தேர்வுகள் வசுந்தரா என்க்ளேவ் ஶ்ரீ சங்கடஹர கணபதி கோவில் வளாகத்தில், நடந்தது. 37 மாணவமணிகள் ( இதில் 12 மாணவமணிகள் குருகிராம் பகுதியை சேர்ந்தவர்கள் ) தமிழ் தேர்வுகளை எழுதினர்.

தேர்வு நடத்த சென்னை தமிழ் இணையக் கல்விக் கழகம் சார்பாக விஜி, தேர்வாளராக வந்திருந்தார். தேர்வுகள் காலை 10 மணி முதல் 12.30 வரை நடைபெற்றது. தேர்வு எழுத இடம் மற்றும் பிற உதவிகளை தந்து ஆதரித்த ஶ்ரீ சங்கடஹர கணபதி கோவில் நிர்வாகிகளுக்கு தமிழர் நலக் கழகம் தனது வணக்கத்தையும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டது.


நமது கோவில்கள் ஆன்மீக பணிகள் தவிர கல்வி , கலாசார பணிகள் செய்வது மிகவும் பாராட்டுதல்களுக்குரியது. அன்று மன்னர்கள் செய்தார்கள். இன்று மக்களே அதை முன்கொண்டு செல்கிறார்கள். வந்திருந்த அனைவருக்கும் கழகம் சார்பில் மதிய விருந்து ஏற்பாடு செய்திருந்தனர். தேர்வுகள் சிறப்பாக நடைபெற அனைத்து ஏற்பாடுகளையும் தமிழர் நலக் கழக நிர்வாகிகள், ஆசிரியர்கள் திறம்பட செய்திருந்தார்கள்.


பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் தாய் மொழி பற்றுடன் அதை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்லும் அனைத்து நல்நெஞ்ங்களும் பாராட்டுதல்களுக்குரியவர்கள்.


- நமது செய்தியாளர் மீனா வெங்கி






      Our Apps Available On




      Dinamalar

      Follow us