
புதுதில்லி : அருணா அசப் அலி சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ தேவி காமாட்சி அம்மன் கோவிலில் மூக பஞ்சஷதி பாராயணம் நடைபெற்றது. பெங்களூரு ரேவதி ராஜாராமன் தலைமையில், பெண்கள் திரளாக பங்கேற்று பாராயணம் செய்தனர். காஞ்சி காமாக்ஷி தேவியின் பேரில் 500 ஸ்லோகங்களை கொண்ட அழகான ஸ்தோத்திரம் மூக பஞ்ச சதீ. இது 5 சதகங்களை கொண்டது.
இதை இயற்றியவர் மூக கவி. “மூகன்” என்றால் ஊமை என்று அர்த்தம். ஊமையாக இருந்த ஒரு பரம பக்தர், காஞ்சீபுரத்தில் குடி கொண்டுள்ள ஜகன்மாதா காமாக்ஷியின் கிருபா கடாக்ஷத்தையும், அவளுடைய தாம்பூல உச்சிஷ்டத்தையும் பெற்று, உடனே அமிருத சாகரம் மாதிரி 500 சுலோகங்களைப் பொழிந்து தள்ளி விட்டார். அதைத்தான் மூக பஞ்ச சதீ என்கிறோம். “பஞ்ச” என்றால் ஐந்து; “சதம்” என்பது நூறு. 100 சுலோகங்கள் கொண்ட தொகுப்புக்கு “சதகம்” என்று பெயர்.
- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்