Dinamalar-Logo
Dinamalar Logo


/பிற மாநில தமிழர்/புதுடில்லி/நொய்டா கோவில்களில் மகா சிவராத்திரி

நொய்டா கோவில்களில் மகா சிவராத்திரி

நொய்டா கோவில்களில் மகா சிவராத்திரி

நொய்டா கோவில்களில் மகா சிவராத்திரி

மார் 09, 2024


மகா சிவராத்திரி பார்வதி தேவி மற்றும் சிவபெருமானின் தெய்வீக திருமணத்தை சித்தரிக்கிறது. இந்த நாளில், இறைவன் படைத்தல், பாதுகாத்தல் மற்றும் அழித்தல், ஆகியவற்றின் பிரபஞ்ச நடனம் நிகழ்த்தியதாகவும் நம்பப்படுகிறது. முப்பது ஆண்டுகளுக்கு மேலாக பக்தர்களுக்கு சேவை செய்து வரும் நொய்டா வேதிக் பிரச்சார் சன்ஸ்தானின் செக்டர் 62 ஸ்ரீ விநாயகா மற்றும் ஸ்ரீ கார்த்திகேயா கோவில் வளாகத்தில், மகா மிருத்தியுஞ்சய ஹோமம், அதைத் தொடர்ந்து சங்காபிஷேகம், நான்கு கால பூஜைகள் செய்து, மகா சிவராத்திரியை வேத மரபுப்படி கொண்டாடப்பட்டது. இக்கோயிலில் முதன்முறையாக இந்த சங்காபிஷேகம் நடத்தப்பட்டது, என்பது குறிப்பிடத்தக்கது.


'மஹா ம்ருத்யுஞ்ஜய' ஹோமம் நீண்ட, ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ கர்ம தோஷங்களிலிருந்து விடுபட செய்யப்படுகிறது. முதலில் பிரதோஷ பூஜையும், அதைத்தொடர்ந்து முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது கால பூஜைகள் 8ம் தேதி மாலையிலும், நான்காவது கால பூஜை (முடிவு பகுதி) மார்ச் 9ம் தேதி அதிகாலையில் நடைபெற்றது.



மகா சிவராத்ரியை முன்னிட்டு, கோவில் நிர்வாகத்தினர் கிருஷ்ண பண்டிட் 'அகிஞ்சனாவின்' சிவ பஜனைகளை ஏற்பாடு செய்திருந்தனர். மேலும், மகா தீபாராதனைக்குப் பின் வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.



மேலும், பிரிவு 22ல் அமைந்துள்ள வி பி எஸ் நிர்வகிக்கும் ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோவில் இதே போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இக்கோயிலில் இருபது ஆண்டுகளுக்கு மேலாக பிரதோஷம் மற்றும் மகா சிவராத்திரி பூஜைகள் நடைபெற்று வருகின்றன, என்பது குறிப்பிடத்தக்கது.



அனைத்து பூஜைகளும் ஹோமங்களும் வி.பி.எஸ். ஆஸ்தான வாத்தியார் ஸ்ரீ ஸ்ரீராம் மேற்பார்வையிலும், வழிகாட்டுதலிலும் கோயில் வாத்தியார்கள் மணிகண்டன் சர்மா, மோஹித் மிஸ்ரா மற்றும் கணபதி ஆகியோரின் உதவியுடன் நடைபெற்றது. நொய்டாவின் பல்வேறு பகுதிகள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தார். ஸ்பான்சர்கள், நன்கொடையாளர்கள், தன்னார்வலர்கள், ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம மண்டலியின் மகளிர் பிரிவு, நிர்வாகக் குழு உறுப்பினர்கள், ஏ பாலாஜி, ராஜு ஐயர், ராமசேஷன், ராஜேந்திரன், ஸ்ரீதர் ஐயர், வெங்கட்ராமன், அர்ஜுன், மற்றும் கோவில் பராமரிப்பு ஊழியர்கள், ஆகியோர் அர்ப்பணிப்புடன் சேவை செய்த அனைவருக்கும் கோவில் நிர்வாகத்தினர் நன்றி தெரிவித்தனர்.



வி பி எஸ், முப்பது ஆண்டுகளுக்கு மேலாக பக்தர்களுக்கு சேவை செய்து வருகிறது, நொய்டாவில் உள்ள இந்த இரண்டு கோவில்கள் : செக்டார் 22ல் உள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகர் திருக்கோயில், மேலும் செக்டார் 62ல் சமீபத்தில் திறக்கப்பட்ட ஸ்ரீ விநாயகர் மற்றும் ஸ்ரீ கார்த்திகேயா கோவில், நிர்வகித்து வருகிறது.



- நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்






      Our Apps Available On




      Dinamalar

      Follow us