ரமண கேந்திரத்தில் மகா சிவராத்திரி
ரமண கேந்திரத்தில் மகா சிவராத்திரி
ரமண கேந்திரத்தில் மகா சிவராத்திரி
பிப் 28, 2025

புதுதில்லி லோதி சாலையில் அமைந்திருக்கும் ரமண கேந்திரத்தில், மகா சிவராத்திரி விழா பகவன் ரமண மகரிஷி சன்னதியில் பக்தி பரவசத்துடன் கொண்டாடப்பட்டது. கணபதி பூஜை, கலச ஸ்தாபனம், வருண பூஜை, மஹாசிவராத்திரி மகா சங்கல்பம், பிராண பிரதிஷ்டை, வேத பண்டிதர்கள் மற்றும் ரித்விக்குகளின் மஹன்யாச பாராயணம் ஆகியவற்றுடன் நிகழ்ச்சி தொடங்கியது.
இதைத் தொடர்ந்து, ஸ்ரீ ருத்ரம் மற்றும் வேத ஸூக்தங்கள் முழங்க, பால், தயிர், தேன் மற்றும் வாசனை திரவியங்கள் கொண்டு ஏகாதச மகா ருத்ர அபிஷேகம் நடைபெற்றது. ஸ்ரீ ருத்ர திரிஸதி அர்ச்சனை, அதைத் தொடர்ந்து, மங்கள ஆரத்தியுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் சங்கல்பம் சாம்பசிவ பரமேஸ்வரருக்கு முறையாக சமர்ப்பிக்கப்பட்டது. பகவானின் அபரிமிதமான ஆசிகள் அனைவருக்கும் கிட்டியது.
- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்

'இருத்தல்” என்பது உணர்ந்து கொள்வது - எனவே நான் நானாக இருக்கிறேன். நான் தான் சிவா. அவர் இல்லாமல் வேறு எதுவும் இருக்க முடியாது. எல்லாமே சிவத்திலும், சிவத்தின் காரணமாகவும் உள்ளது. எனவே 'நான் யார்?' என்று விசாரிக்கவும். உள்ளுக்குள் ஆழ்ந்து சுயமாக இருங்கள். அதுவே சிவா இருப்பது போல் சிவா ஆக...[பேச்சு 450, ஸ்ரீ ரமண மகரிஷி உடனான பேச்சுகளை தழுவியது)
- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்