/பிற மாநில தமிழர்/புதுடில்லி/துவாரகா ஸ்ரீ ராம் மந்திரின் கும்பாபிஷேக மலர் மற்றும் ஆலய வரலாறு வெளியீட்டு விழாதுவாரகா ஸ்ரீ ராம் மந்திரின் கும்பாபிஷேக மலர் மற்றும் ஆலய வரலாறு வெளியீட்டு விழா
துவாரகா ஸ்ரீ ராம் மந்திரின் கும்பாபிஷேக மலர் மற்றும் ஆலய வரலாறு வெளியீட்டு விழா
துவாரகா ஸ்ரீ ராம் மந்திரின் கும்பாபிஷேக மலர் மற்றும் ஆலய வரலாறு வெளியீட்டு விழா
துவாரகா ஸ்ரீ ராம் மந்திரின் கும்பாபிஷேக மலர் மற்றும் ஆலய வரலாறு வெளியீட்டு விழா

தில்லி மாநில கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி டி. கார்த்திகேயன் கலந்து கொண்டு இரண்டு நூல்களையும் வெளியிட்டுப் பேசினார். முதல் பிரதியை தில்லி பஜனை சமாஜத்தின் தலைவர் எஸ். ராஜு பெற்றுக் கொண்டார். தில்லிக் கம்பன் கழகத்தின் தலைவர் கே வி கே பெருமாள், தில்லித் தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் ஆர் முகுந்தன், முன்னாள் இணைச் செயலாளர் சத்யா அசோகன், முன்னாள் இணைப் பொருளாளர் ராஜ்குமார் பாலா, ஜி.எம்.ஆர். குழுமத்தின் இயக்குனர் நாராயண ராவ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில் தில்லிக் கம்பன் கழகத்தின் செயலாளர் எஸ்.பி.முத்துவேல் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகக் குழுவின் செயலாளர் என். முரளி மற்றும் வி.கிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர். அறங்காவலர் குழுவைச் சார்ந்த வி.கிருஷ்ணன் நன்றி கூறினார். பாதுகாப்பு அமைச்சகத்தின் ஓய்வு பெற்ற அலுவலர் வசந்தா சுந்தரம் தொகுத்து வழங்கினார்.
- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்