
புது தில்லி விகாஸ் புரியில் அமைந்துள்ள ஸ்ரீ தேவி மூகாம்பிகை கோவில் தியானம் மற்றும் கலாச்சார மையத்தில் விகாஸ்புரியை சார்ந்த அன்பர்கள் திவ்ய நாம சங்கீர்த்தனம் நிகழ்த்தினர். தோடய மங்கலத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. இதைத் தொடர்ந்து பஞ்சபதி பூஜை மற்றும் திவ்ய நாம பஜனை நடைபெற்றது.
பிரதி மாதம் இரண்டாவது சனிக்கிழமை தோறும், திவ்ய நாம சங்கீர்த்தனம் இக்கோயிலில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்