Dinamalar-Logo
Dinamalar Logo


/பிற மாநில தமிழர்/புதுடில்லி/புரந்தரதாசர் தியாகராஜர் இசை விழா: வெற்றியாளர்களுக்கு பரிசளிப்பு விழா

புரந்தரதாசர் தியாகராஜர் இசை விழா: வெற்றியாளர்களுக்கு பரிசளிப்பு விழா

புரந்தரதாசர் தியாகராஜர் இசை விழா: வெற்றியாளர்களுக்கு பரிசளிப்பு விழா

புரந்தரதாசர் தியாகராஜர் இசை விழா: வெற்றியாளர்களுக்கு பரிசளிப்பு விழா

ஜூலை 09, 2024


Latest Tamil News
ராமகிருஷ்ணாபுரம் சவுத் இந்தியன் சொசைட்டி மற்றும் இந்தியா இன்டர்நேஷனல் சென்டர், இணைந்து நடத்திய, புரந்தரதாசர் தியாகராஜர் இசை விழா - வர்ணம் வாய்ப்பாட்டு போட்டியில் - 11வது தொகுப்பில் வெற்றி பெற்றவர்கள் கர்நாடக இசை கச்சேரி வழங்கினர்.

கச்சேரி வழங்கிய வர்ணம் குரல் போட்டியில் வெற்றி பெற்றவர்கள்: (சீனியர் பிரிவில் முதல் பரிசு) சினேகா சதீஷ், இரண்டாவதாக எஸ்.கே.மிருதுளா வென்றனர். மேலும், ஜூனியர் பிரிவில் முதல் பரிசு கீர்த்தனா வினோத், இரண்டாம் பரிசு எம் ஆதித்யா, மூன்றாம் பரிசு வைபவ் வைத்தியநாதன், ஆகியோருக்கு வழங்கப்பட்டது. வெற்றியாளர்களுக்கு, விருது கோப்பை, சான்றிதழ் மற்றும் ரொக்கப் பரிசு ஆகியவை வழங்கப்பட்டது.


முன்னதாக, குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சி தொடங்கியது. தொடர்ந்து, சங்கத் தலைவர் ஆர்.கே.வாசன் வரவேற்புரை வழங்கினார். சங்கத்தின் துணைத் தலைவர் எஸ்.கிருஷ்ணசாமி கலைஞர்களை அறிமுகப்படுத்தினார். கலைஞர்களுக்கு வயலினில் சௌமியா கண்ணன் மற்றும் சித்தேஷ் கணேஷ், தவிர, மிருதங்கத்தில் ரதுல் ஸ் குமார் மற்றும் ஜி சுவாமிநாதன் ஆகியோர் பக்க வாத்தியம் வாசித்தனர். நொய்டாவின் வேதிக் பிரசார் சன்ஸ்தான் (வி பி எஸ்) மூத்த குழு உறுப்பினர்கள் : எ பாலாஜி - பொது செயலாளர், ஆர் ராமசேஷன் - பொருளாளர், மற்றும் ராஜு ஐயர் - இணைச் செயலாளர், வெற்றி பெற்ற பாடகர்களுக்கு பரிசுகளை வழங்கினர். சங்கத்தின் சார்பில், துணைத் தலைவர் எஸ்.கிருஷ்ணசாமி, சங்க செயலாளர் எஸ்.வெங்கடேஷ், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களை கவுரவித்தனர்.


ஆர் ராமசேஷன், கர்நாடக இசையில் இளம் திறமைகளை ஊக்குவிப்பதில் ஆர் கே பி சொசைட்டியின் சேவைகளைப் பாராட்டினார். மேலும், அற்புதமான இசை நிகழ்ச்சி வழங்கிய கலைஞர்களை ஆசீர்வதித்தார். மேலும், ஸ்ரீ ஹயக்ரீவா : குரு சரண், ஸ்ரீ வரத கணேசர் கோவில், தில்ஷாத் கார்டன், டெல்லி, பொது செயலாளர் : ஜி ரகுராமன், மற்றும் தில்லி மற்றும் அண்டை பகுதிகளில் இருந்து இசை ஆர்வலர்கள், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ஆர்.கே.பி. சங்கம் சார்பில் ஆர்.கே.வாசன் இவர்களை கவுரவித்தார். எஸ் கிருஷ்ணசாமி நன்றியுரை வழங்கினார்.


தலைநகரில் பதிவு செய்யப்பட்ட ராமகிருஷ்ணாபுரம் தென்னிந்திய சங்கம், ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இசை ஆர்வலர்களுக்கு சேவை செய்யும் பழமையான கலாச்சார அமைப்புகளில் ஒன்றாகும். கர்நாடக இசையை, இளம் திறமைகளுக்கு, ஊக்குவிக்கிறது, மற்றும் தலைநகரில் பல்வேறு இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்கள், என்பது குறிப்பிடத்தக்கது.


- நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்






      Our Apps Available On




      Dinamalar

      Follow us