/பிற மாநில தமிழர்/புதுடில்லி/நொய்டா கோவில்களில் ஆடி வெள்ளி பூஜைகள்நொய்டா கோவில்களில் ஆடி வெள்ளி பூஜைகள்
நொய்டா கோவில்களில் ஆடி வெள்ளி பூஜைகள்
நொய்டா கோவில்களில் ஆடி வெள்ளி பூஜைகள்
நொய்டா கோவில்களில் ஆடி வெள்ளி பூஜைகள்
ஜூலை 27, 2024

நொய்டாவின் செக்டார் 62ல் உள்ள ஸ்ரீ விநாயகா மற்றும் ஸ்ரீ கார்த்திகேயா கோவில் வளாகத்தில், வேதிக் பிரசார் சன்ஸ்தான் (விபிஎஸ்), ஏற்பாடு செய்திருந்த விளக்கு பூஜையில் பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். அனைத்து பூஜைகளும் ஸ்ரீ சங்கர் வாத்தியார் மேற்பார்வையில், ஸ்ரீ மணிகண்டன் உதவியோடு நடைபெற்றது. மேலும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மகா தீபாராதனையுடன் நிகழ்ச்சி நிறைவடைந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
இதே போன்ற பூஜைகள் நொய்டா, செக்டார் 22ல் உள்ள VPS நிர்வகிக்கும் ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயிலிலும் நடைபெற்றன. ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் பாராயணத்தில் பக்தர்கள் கலந்து கொண்டனர். இதையொட்டி, துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பூஜைகளை ஸ்ரீ ஜெகதீஸ் சிவாச்சாரியார் நடத்தினார். மகா தீபாராதனையுடன் நிகழ்ச்சி நிறைவடைந்து அனைவருக்கும் மகா பிரசாதம் வழங்கப்பட்டது.
- நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்