Dinamalar-Logo
Dinamalar Logo


/பிற மாநில தமிழர்/புதுடில்லி/நொய்டா முருகன் கோவிலில் 'தை' பூச விழா

நொய்டா முருகன் கோவிலில் 'தை' பூச விழா

நொய்டா முருகன் கோவிலில் 'தை' பூச விழா

நொய்டா முருகன் கோவிலில் 'தை' பூச விழா

பிப் 11, 2025


Latest Tamil News
'தை பூசம்' விழா, நொய்டாவில் உள்ள ஸ்ரீ விநாயகா மற்றும் ஸ்ரீ கார்த்திகேயா கோவிலில், கலச பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து 'பக்தர்கள்' கோவில் வளாகத்திற்குள் 'காவடி மற்றும் பால் குடத்துடன் ஊர்வலம் சென்றனர். விழாவின் சிறப்பு அம்சமாக, ஸ்ரீ கார்த்திகேயனுக்கு எண்ணெய், திரவியம், மற்றும், பால், தயிர், தேன், இளநீர், பழச்சாறு, விபூதி, சந்தனம், கலச அபிஷேகம், ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் முடிந்தவுடன் வெள்ளி கவசத்தால் அலங்கரிக்கப்பட்டது.
பக்தர்கள், பல்வேறு ஸ்லோகங்கள் பாடி, ஸ்ரீ கார்த்திகேயரைப் போற்றி, பக்திப் பாடல்களைப் பாடி, 'முருகனுக்கு ஹரோ ஹரா' என்று கோஷமிட்டனர். மேலும், அங்கிருந்த அனைவரும் 'முருக கோஷம்' படித்தனர். அனைத்து பூஜைகளும் கோயில் வாத்தியார்கள்: மணிகண்டன் சர்மா, மோஹித் மிஸ்ரா, தென்னிந்தியா முழுவதும் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் உள்ள முருகன் கோவில்களில் நடைபெறும் அதே வரிசையில், நடத்தி வைத்தனர். அன்றைய தினம் மகா தீபாராதனையுடன் நிறைவுற்று, அனைவருக்கும் மகா பிரசாதம் வழங்கப்பட்டது.

கடுமையான குளிர் காலத்தை தொந்தரவு செய்யாமல், நொய்டாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், டெல்லியின் அண்டைப் பகுதிகளிலிருந்தும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் பக்தர்கள் திரளாக வந்து ஸ்ரீ கார்த்திகேயரின் அருள் பெற்றனர். கோவில் நிர்வாகத்தினர், ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம மண்டலி மற்றும் உறுப்பினர்கள் ஏ பாலாஜி, ராமசேஷன், ராஜு ஐயர், ராஜேந்திரன், வெங்கட்ராமன், ராதாகிருஷ்ணன், பழனிவேல் ஆகியோர்க்கு சிறப்பாக இவ்விழாவை நடத்தி கொடுத்ததற்கு நன்றி தெரிவித்தனர்.


- நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்






      Our Apps Available On




      Dinamalar

      Follow us