அதிபர் வேட்பாளர் : பைடனை மாற்ற முயற்சி?
அதிபர் வேட்பாளர் : பைடனை மாற்ற முயற்சி?
அதிபர் வேட்பாளர் : பைடனை மாற்ற முயற்சி?
UPDATED : ஜூன் 28, 2024 08:50 PM
ADDED : ஜூன் 28, 2024 08:35 PM

வாஷிங்டன்:நேருக்கு நேர் நிகழ்ச்சியில் ட்ரம்பை எதிர்கொள்ள முடியாமல் பைடன் திணறல்.இதனால் அவரது கட்சி ஆதரவாளர்களும், நிர்வாகிகளும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து பைடனை விலக்கி வேறு வேட்பாளரை களத்தில் இறக்கலாமா என பைடன் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பரிசீலனை செய்து வருகிறார்கள்.
பைடனின் வயது ஏற்கெனவே தேர்தலில் பேசு பொருளான நிலையில் அவரது உடல் தளர்ச்சி மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி அதிபர் வேட்பாளர்களான ஜோ பைடன் 81, டிரம்ப் 78, ஆகிய இருவரிடையே நடந்த நேருக்கு நேர் விவாதத்தில் டிரம்ப் முன்னேறியதாகவும், அவரது நிறுவன பங்குகள் விலை உயர்ந்ததாக கூறப்படுகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பரில் நடைபெற உள்ளது. தற்போதைய அதிபர் ஜோபைடன் ஜனநாயக கட்சி சார்பில் மீண்டும் களமிறங்குகிறார். அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார்.
இத்தேர்தலில் முக்கிய நிகழ்வாக இரு கட்சி அதிபர் வேட்பாளர்களும் நேருக்கு நேர் விவாதத்தில் பங்கேற்று இருவரும் காரசார விவாத்தில் ஈடுபட்டனர். அப்போது, அமெரிக்க பொருளாதாரம், குடியேற்றம், உக்ரைன், இஸ்ரேல் விவகாரம், அரசின் பல்வேறு சட்டங்கள் குறித்து டிரம்ப் வாதத்திற்கு பதிலடி தர முடியாமல் பைடன் திணறியதாக கூறப்படுகிறது. இதில் டிரம்ப் விவாதம் வெற்றிகரமாக அமைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் டிரம்ப் தொழிலதிபர் என்பதால் அமெரிக்க பங்கு சந்தையில் டிரம்ப்பிற்கு சொந்தமான நிறுவன பங்குகள் விலை 5 சதவீதம் உயர்ந்ததாக கூறப்படுகிறது.