'ட்விட்டர்' கொலையாளி துாக்கிலிடப்பட்டார்
'ட்விட்டர்' கொலையாளி துாக்கிலிடப்பட்டார்
'ட்விட்டர்' கொலையாளி துாக்கிலிடப்பட்டார்
ADDED : ஜூன் 28, 2025 01:44 AM
டோக்கியோ: ஜப்பானின் டோக்கியோவிற்கு அருகிலுள்ள கனகாவாவில் உள்ள ஜமா நகரை சேர்ந்தவர் தகாஹிரோ ஷிரைஷி.
இவர், தற்கொலை செய்து கொள்ள விரும்புவதாக பதிவிடும் இளம் பெண்கள் மற்றும் ஆண்களை குறிவைத்து முன்னர், 'ட்விட்டர்' என்று அழைக்கப்பட்ட தற்போதைய 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் ஆறுதலாக பேசுவார். அவர்களை வீட்டுக்கு வரவழைத்து கொலை செய்து வந்தது 2017ம் ஆண்டு வெளிச்சத்துக்கு வந்தது.
காணாமல் போன ஒரு பெண்ணுக்கும், ஷிரைஷிக்கும் நடந்த, 'ட்விட்டர்' உரையாடல்களை அந்தப் பெண்ணின் சகோதரர் கண்டுபிடித்தபோது இந்த அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளிவந்தன.
இப்படி, எட்டு பெண்கள் மற்றும் ஒரு ஆணை கொடூரமாக கொன்றுள்ளார். 2020ல் இவருக்கு துாக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று அவர் துாக்கிலிடப்பட்டார்.