Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/ஹெச்1பி விசா விவகாரத்தில் டிரம்ப் திடீர் அறிவிப்பு; தாயகம் வந்த இந்தியர்களுக்கு சிக்கல்

ஹெச்1பி விசா விவகாரத்தில் டிரம்ப் திடீர் அறிவிப்பு; தாயகம் வந்த இந்தியர்களுக்கு சிக்கல்

ஹெச்1பி விசா விவகாரத்தில் டிரம்ப் திடீர் அறிவிப்பு; தாயகம் வந்த இந்தியர்களுக்கு சிக்கல்

ஹெச்1பி விசா விவகாரத்தில் டிரம்ப் திடீர் அறிவிப்பு; தாயகம் வந்த இந்தியர்களுக்கு சிக்கல்

UPDATED : செப் 20, 2025 07:25 PMADDED : செப் 20, 2025 04:00 PM


Google News
Latest Tamil News
நியூயார்க்: ஹெச் 1பி விசாவுக்கு ஒரு லட்சம் அமெரிக்க டாலர் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற அதிபர் டிரம்ப் உத்தரவு, தாயகம் வந்துள்ள இந்தியர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் செயல்படும் தொழில்நுட்ப நிறுவனங்கள், தங்களுக்கு தேவையான தொழில் வல்லுனர்களை சிறப்பு விசா மூலம் வேலைக்கு அமர்த்திக் கொள்கின்றனர்.

ஹெச் 1பி விசா விவகாரத்தில் டிரம்ப் திடீர் அறிவிப்பு; தாயகம் வந்த இந்தியர்களுக்கு சிக்கல் என்று அழைக்கப்படும் இந்த விசாவுக்கு அமெரிக்க அரசிடம் அனுமதி பெற்றால் போதும் என்ற நடைமுறை முன்பு இருந்தது. ஆயிரம் டாலர்களுக்கு குறைவான கட்டணத்தை மட்டும் அரசுக்கு செலுத்தி விட்டால் போதும்.

இதன் மூலம், இந்திய தொழில் நுட்ப வல்லுநர்கள் ஏராளமான பேர் அமெரிக்காவில் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்த விசா நடைமுறை அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை பறிப்பதாக டிரம்ப் கட்சியினர் நீண்ட நாட்களாக புகார் கூறி வருகின்றனர். எனவே இந்த விசா நடைமுறையை ஒழித்துக் கட்டும் வகையில் புதிய சட்டம் ஒன்றை டிரம்ப் இன்று பிறப்பித்தார்.

அதன்படி, ஹெச் 1பி விசா விவகாரத்தில் டிரம்ப் திடீர் அறிவிப்பு; தாயகம் வந்த இந்தியர்களுக்கு சிக்கல் விசாவில் ஒரு தொழில் வல்லுநரை வேலைக்கு அமர்த்த நினைக்கும் அமெரிக்க நிறுவனம், ஆண்டுக்கு ஒரு லட்சம் டாலர் கட்டணம் செலுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு செப்டம்பர் 21ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிநாடுகளில் இருக்கும் தங்கள் ஹெச் 1பி விசா விவகாரத்தில் டிரம்ப் திடீர் அறிவிப்பு; தாயகம் வந்த இந்தியர்களுக்கு சிக்கல் விசா ஊழியர்களை செப்டம்பர் 21ம் தேதிக்குள் அமெரிக்கா வந்துவிடும்படி தொழில்நுட்ப நிறுவனங்கள் அறிவுறுத்தி உள்ளன.

ஆனால் குறைவான கால அவகாசமே இருப்பதால், இந்தியாவில் தொலைதூரப் பகுதிகளில் இருப்பவர்கள், உரிய நேரத்தில் அமெரிக்காவுக்கு சென்று சேர சாத்தியமில்லை.

டிரம்ப் அறிவிப்பு வெளியானதுமே, நகரங்களில் இருந்த பலர் உடனடியாக அமெரிக்காவுக்கு விமானங்களில் பயணிக்க புறப்பட்டனர்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள எண்ணிய விமான நிறுவனங்கள், கட்டணத்தை இரு மடங்காக வசூலித்தனர் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வழக்கமாக டில்லியில் இருந்து நியூயார்க் செல்வதற்கு விமான கட்டணம் 37 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கப்படும். தற்போதைய நெருக்கடியை பயன்படுத்தி விமான நிறுவனங்கள், 70 ஆயிரம் ரூபாய் முதல் 80 ஆயிரம் ரூபாய் வரை வசூலித்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

டிரம்ப் அறிவிப்பால் அமெரிக்க விமான நிலையங்களிலும் இன்று காலை பெரும் குழப்பம் ஏற்பட்டது.

வெளிநாடு செல்வதற்காக டிக்கெட் முன்பதிவு செய்து இருந்தவர்கள், ரத்து செய்தனர். வெளிநாடு மற்றும் விடுமுறையில் செல்வதற்காக விமானங்களில் ஏறி இருக்கையில் அமர்ந்திருந்தவர்கள், அலறி அடித்துக் கொண்டு விமானங்களில் இருந்து இறங்கிய காட்சிகள் அரங்கேறின.

நவராத்திரி, துர்கா பூஜையை முன்னிட்டு தாயகம் திரும்ப திட்டமிட்டிருந்த பலர், இவ்வாறு சிரமத்தை எதிர்கொண்டனர். முன்கூட்டியே தாயகம் வந்திருந்த பலர், மீண்டும் அமெரிக்கா செல்வது எப்படி என்ற சிக்கலை எதிர்கொண்டுள்ளனர்.

வெளியுறவுத்துறை அறிக்கை




ஹெச்1 பி விசா தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், மனிதாபிமான அடிப்படையில் குடும்பங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து அமெரிக்க அதிகாரிகள் கருத்தில் கொள்வர் என்று எதிர்பார்க்கிறோம் என தெரிவித்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us