Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/அமெரிக்க அதிபர்கள் யாருமே செய்யாத செயல்; பிரதமர் மோடிக்காக டிரம்ப் எடுத்த ரிஸ்க்

அமெரிக்க அதிபர்கள் யாருமே செய்யாத செயல்; பிரதமர் மோடிக்காக டிரம்ப் எடுத்த ரிஸ்க்

அமெரிக்க அதிபர்கள் யாருமே செய்யாத செயல்; பிரதமர் மோடிக்காக டிரம்ப் எடுத்த ரிஸ்க்

அமெரிக்க அதிபர்கள் யாருமே செய்யாத செயல்; பிரதமர் மோடிக்காக டிரம்ப் எடுத்த ரிஸ்க்

Latest Tamil News
புதுடில்லி: தேர்தல் பிரசாரத்தின் போது துப்பாக்கியால் சுடப்பட்ட டிரம்ப், தற்போது நாட்டிற்காக சமரசமில்லாத அர்ப்பணிப்பை கொடுத்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியை பேட்டி எடுத்த அமெரிக்க கம்ப்யூட்டர் விஞ்ஞானியும், எழுத்தாளருமான லெக்ஸ் பிரிட்மேன், அந்த வீடியோவை சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த இன்டர்வ்யூவில், டிரம்ப்பை நண்பராகவும், ஒரு தலைவராகவும் எப்படி பார்க்கிறீர்கள்? என்று பிரிட்மேன் பிரதமரிடம் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய பிரதமர் மோடி, 2019ல் அமெரிக்காவில் நடந்த ஹவுடி மோடி நிகழ்ச்சியை சுட்டிக்காட்டி சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது: கடந்த 2019ல் ஹூஸ்டனில் 'ஹவுடி மோடி' நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மக்கள் கூட்டம் அலைமோதியது. நான் உரையாற்றி கொண்டிருக்கும் போது, அதிபர் டிரம்ப் பார்வையாளர்களுடன் அமர்ந்திருந்தார். இது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

எனது உரையை முடித்த பிறகு, மேடையில் இருந்து கீழே இறங்கி வந்தேன். அப்போது, என்னுடன் சேர்ந்து அரங்கை வலம் வருமாறு டிரம்ப்பிடம் கோரிக்கை விடுத்தேன். அமெரிக்கர்களின் வாழ்க்கையை பொறுத்தவரையில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருக்கும் இடத்தில் அதிபர் ஒருவர் பாதுகாப்பின்றி நடந்து வருவது என்பது சாதாரண விஷயம் கிடையாது.

இது அவரது சொந்த முடிவாகும். என் மீதும், அந்த நிகழ்ச்சியில் என்னுடைய தலைமையின் மீதும் வைத்த நம்பிக்கையின் பேரில், மக்கள் கூட்டத்திற்கு மத்தியில், எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் என்னுடன் நடைபோட்டார். எங்களுக்கு இடையிலான வலுவான உறவு மற்றும் பரஸ்பரமான நம்பிக்கைக்கு இது சான்றாகும்.

கடந்த ஆண்டு தேர்தல் பிரசாரத்தின் போது, அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட போதும், டிரம்ப்பிடம் அதே உறுதியைக் கண்டேன். தற்போது நாட்டிற்காக சமரசமில்லாத அர்ப்பணிப்பை கொடுத்து வருகிறார், இவ்வாறு அவர் கூறினார்.

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் குறித்த கேள்விக்கு பதிலளித்த பிரதமர் மோடி, 'இரு நாடுகளுடனும் நெருக்கமான உறவு இந்தியாவுக்கு உள்ளது. புடினுடன் அமர்ந்து பேசும் போது, போருக்கான நேரம் இதுவல்ல என்று கூறினேன். அதேபோல, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடமும் நட்பு ரீதியில், சில விஷயங்களை கூறினேன். உலகில் எத்தனை பேர் உங்களுடன் நின்றாலும், போர்க்களத்தில் தீர்வு கிடைக்காது என்று சொன்னேன்.

உக்ரைன் தனது ஆதரவு நாடுகளுடன் பலமுறை பேச்சு நடத்தியது. ஆனால் தீர்வு கிடைக்கவில்லை. அதற்கு பதிலாக, சண்டையிடும் இருநாடுகள் நேரடியாக பேச்சு நடத்தினால், பிரச்னை சரியாகி விடும்' என்றார்.

அதேபோல, இந்தியா - சீனா இடையிலான உறவை வலுப்படுத்துவது குறித்த கேள்விக்கு பிரதமர் பதிலளித்ததாவது: போட்டி என்பது மோதல்களாக மாறக்கூடாது. வேறுபாடுகள் சச்சரவுகளாக மாற்றப்படக்கூடாது. மோதலை விட பேசி தீர்வு காண்பதையே எப்போதும் விரும்புகிறோம், என்று தனது நிலைப்பாட்டை கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us