குடும்ப தொழிலுக்காக இந்திய உறவை தூக்கி எறிந்தார் டிரம்ப்: அமெரிக்க முன்னாள் அதிகாரி பேட்டி
குடும்ப தொழிலுக்காக இந்திய உறவை தூக்கி எறிந்தார் டிரம்ப்: அமெரிக்க முன்னாள் அதிகாரி பேட்டி
குடும்ப தொழிலுக்காக இந்திய உறவை தூக்கி எறிந்தார் டிரம்ப்: அமெரிக்க முன்னாள் அதிகாரி பேட்டி

வாஷிங்டன்:'' டிரம்ப்பின் குடும்பத்தினருடன் இணைந்து தொழில் செய்ய பாகிஸ்தான் விரும்பியதால், இந்தியா உடனான உறவை அமெரிக்க அதிபர் டிரம்ப் தூக்கி எறிந்துவிட்டார்,'' என அந்நாட்டின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சலிவன் கூறியுள்ளார்.
இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார், இதனால், இந்தியா அமெரிக்கா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இதற்கு அந்நாட்டில் முக்கிய அதிகாரிகள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வுருகின்றனர்.
மோடியின் சீன பயணம்இச்சூழ்நிலையில், பிரதமர் மோடி, சீனா சென்று அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் புடினை சந்தித்து பேசியிருந்தார். ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிலும் பங்கேற்று உரையாற்றினார். அப்போது மோடி, '' உறுப்பு நாடுகள் இடையே வர்த்தகத்தை அதிகரிக்க இணைப்பை அதிகரிக்க வேண்டும். இதன் மூலம் வளர்ச்சி மற்றும் நம்பிக்கை அதிகரிக்கும்'' எனக்கூறியிருந்தார்.
புலம்பல்இதனையடுத்து அமெரிக்க அதிகாரிகள் புலம்பி வருகின்றனர். அந்நாட்டின் கருவூலத்துறை அமைச்சர் ஸ்காட் பெசன்ட் கூறுகையில், 'இந்தியா அமெரிக்கா இடையிலான வர்த்தக பிரச்னை தீர்க்கப்படும். சீனா மற்றும் ரஷ்யா உடனான இந்தியாவின் உறவை விட அமெரிக்கா உடனான உறவு சிறப்பானதாக உள்ளது' எனத் தெரிவித்தார்.
அதேநேரத்தில் டிரம்ப்பின் வர்த்தக ஆலோசகரான பீட்டர் நவரோ கூறுகையில், ' உலகின் இரண்டு சர்வாதிகாரிகளான புடின் மற்றும் ஜின்பிங் உடன் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவரான மோடி இருப்பது வெட்கப்பட வேண்டியது. இதில் எந்த அர்த்தமும் கிடையாது. அவர், அமெரிக்கா உடனும், ஐரோப்பா உடனும் மற்றும் உக்ரைனுடனும் தான் இருக்க வேண்டுமே தவிர, ரஷ்யா உடன் அல்ல' என்றார்.
இந்தியா தேவைஇந்நிலையில், அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஜேக் சலிவன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளதாவது: தொழில்நுட்பம், திறமை, பொருளாாதாரம் உள்ளிட்ட பல விஷயங்களில் நாம் இணைந்திருக்க வேண்டிய நாடான இந்தியா உடன் உறவை வலுப்படுத்த அமெரிக்கா பணியாற்றியது. சீனாவிடம் இருந்து வரும் அச்சுறுத்தலை சமாளிக்கவும் இந்திய உறவு தேவை.
டிரம்ப்பின் குடும்பத்தினருடன் இணைந்து பாகிஸ்தான் தொழில் செய்ய விரும்புகிறது. இதனால், இந்தியா உடனான உறவை டிரம்ப் தூக்கி எறிந்து விட்டார் என நான் நினைக்கிறேன். இதனால், ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகளும், தங்களுக்கும் இதேபோல் நிலைமை வருமோ என நினைக்கின்றன. நம்மை சார்ந்து இருக்க வேண்டாம் என அமெரிக்காவின் நட்பு நாடுகளும் நினைக்க துவங்கிவிட்டன. இவ்வாறு அவர் கூறினார்.