ரஷ்யா- உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து புடின், ஜெலன்ஸ்கியுடன் பேசுவேன்: சொல்கிறார் டிரம்ப்
ரஷ்யா- உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து புடின், ஜெலன்ஸ்கியுடன் பேசுவேன்: சொல்கிறார் டிரம்ப்
ரஷ்யா- உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து புடின், ஜெலன்ஸ்கியுடன் பேசுவேன்: சொல்கிறார் டிரம்ப்
ADDED : மே 17, 2025 10:04 PM

வாஷிங்டன்: உக்ரைன் போர் குறித்து திங்கட்கிழமை புடினுடன் தொலைபேசியில் பேசுவேன் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.
இது தொடர்பாக டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திங்கட் கிழமை காலை 10:00 மணிக்கு, ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புடினிடம் தொலைபேசி மூலம் பேசுவேன். அப்போது, வாரத்திற்கு சராசரியாக 5000க்கும் மேற்பட்ட ரஷ்ய மற்றும் உக்ரைன் வீரர்களைக் கொல்லும், போரை நிறுத்துவது குறித்து பேசுவேன்.
பின்னர் நான் உக்ரைனின் அதிபர் ஜெலன்ஸ்கியிடமும், பேசுவேன். இது ஒரு முக்கியமான நாளாக இருக்கும் என்று நம்புகிறேன், ஒரு போர் நிறுத்தம் ஏற்படும். மேலும் இந்த வன்முறை முடிவுக்கு வரும். இவர் அவர் கூறியுள்ளார்.
ரஷ்யா-உக்ரைன், மூன்று ஆண்டுகளில் முதல் முறையாக நேரடி அமைதிப் பேச்சுவார்த்தை நடத்திய ஒரு நாளுக்கு பிறகு அதிபர் டிரம்ப் மத்தியஸ்தம் செய்வேன் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.