Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/ எலான் மஸ்க் நண்பரை கழற்றிவிட்ட டிரம்ப்

எலான் மஸ்க் நண்பரை கழற்றிவிட்ட டிரம்ப்

எலான் மஸ்க் நண்பரை கழற்றிவிட்ட டிரம்ப்

எலான் மஸ்க் நண்பரை கழற்றிவிட்ட டிரம்ப்

ADDED : ஜூன் 02, 2025 02:50 AM


Google News
வாஷிங்டன் : அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்புக்கு, சிறந்த அரசு நிர்வாகம் மற்றும் செலவின குறைப்புக்கான ஆலோசனை வழங்கி வந்தார், பெரும் பணக்கார தொழிலதிபர் எலான் மஸ்க்.

டிரம்புடன் ஏற்பட்ட கருத்து மோதலால், எலான் மஸ்க் அந்தப் பொறுப்பில் இருந்து சமீபத்தில் விலகினார்.

இந்நிலையில், நாசா எனப்படும் அமெரிக்க விண்வெளி மையத்தின் தலைமை பொறுப்பை ஏற்று நடத்துவதற்கு, பணக்கார தொழிலதிபரான ஜாரெட் ஐசக்மேன் பெயரை, டிரம்ப் பரிந்துரை செய்திருந்தார். இவர், எலான் மஸ்க்கின் நண்பர்.

'ஐசக்மேனின் முந்தைய தொடர்புகள் தொடர்பாக ஆய்வு செய்ததைத் தொடர்ந்து, நாசாவின் தலைமை பொறுப்புக்கான பரிந்துரையை திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்' என, டிரம்ப் நேற்று கூறியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us