டிரம்ப் - மஸ்க் போன வாரம் 'டூ' இப்போது 'பழம்'
டிரம்ப் - மஸ்க் போன வாரம் 'டூ' இப்போது 'பழம்'
டிரம்ப் - மஸ்க் போன வாரம் 'டூ' இப்போது 'பழம்'
ADDED : ஜூன் 12, 2025 06:30 AM

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் நெருங்கிய நண்பராக இருந்தவர் தொழிலதிபர் எலான் மஸ்க். அரசின் செயல்திறன் மேம்பாட்டு துறையின் தலைவராகவும் இருந்தார்.
சமீபத்தில் அந்த பதவியில் இருந்து விலகினார். அதன் பின் டிரம்ப் அரசு புதிய செலவு மசோதாவை அறிமுகப்படுத்தியது.
இந்த மசோதாவை எதிர்க்கட்சியை காட்டிலும் எலான் மஸ்க் கடுமையாக விமர்சித்தார். அருவருப்பானது என்றார்.
இதனால் கோபமடைந்த டிரம்ப், எலான் மஸ்க் நிறுவனத்துக்கு செல்லும் மானியங்களை நிறுத்த போவதாக மிரட்டல் விடுத்தார்.
இந்நிலையில், டிரம்ப் குறித்த தன் சமூக வலைதள பதிவுகளுக்கு எலான் மஸ்க் நேற்று வருத்தம் தெரிவித்தார். அதில் தான் எல்லை மீறிவிட்டதாகவும் கூறியிருந்தார்.
இது குறித்து அதிபர் டிரம்ப் தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், அவரை எதற்கும் குறை கூறவில்லை. நான் சற்று ஏமாற்றமடைந்தேன். நிச்சயமாக அவர் என்னுடன் பேச விரும்புவார் என்று நினைக்கிறேன், என்றார்.