Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/ கருக்கலைப்பு மாத்திரை கண்டுபிடித்தவர் மரணம்

கருக்கலைப்பு மாத்திரை கண்டுபிடித்தவர் மரணம்

கருக்கலைப்பு மாத்திரை கண்டுபிடித்தவர் மரணம்

கருக்கலைப்பு மாத்திரை கண்டுபிடித்தவர் மரணம்

ADDED : ஜூன் 02, 2025 02:18 AM


Google News
Latest Tamil News
பாரிஸ்: கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த ஐரோப்பிய நாடான பிரான்ஸ் விஞ்ஞானியும், டாக்டருமான எட்டியென்- எமிலி பவுலியூ, 98, வயது மூப்பு காரணமாக நேற்று முன்தினம்காலமானார்.

கடந்த, 1926ல் பிரான்சின் ஸ்ட்ராஸ்பேர்க்கில் எட்டியென் ப்ளூமில் பிறந்த பவுலியூ, நாளமில்லா சுரப்பியியல் நிபுணர் ஆவார்.

ஸ்டீராய்டு ஹார்மோன்களில் அவரது ஆராய்ச்சிகள், மருத்துவத் துறையில் முக்கிய கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுத்தன.

கடந்த 1963ல் தனியாக ஹார்மோன் ஆராய்ச்சி பிரிவை அவர் நிறுவினார். அதன் தலைவராக, 1997 வரை இருந்தார்.

கருக்கலைப்புக்கான, ஆர்.யு., -486 என்ற மருந்தை, 1982ல் அவர் கண்டுபிடித்தார். இதைத் தவிர, மனசோர்வு உள்ளிட்ட பல ஹார்மோன் தொடர்பான மாத்திரைகளையும் அவர் கண்டுபிடித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us