வரி குறைப்புக்காக முறைகேடு: 1,000 மின்சார கார்கள் பறிமுதல்
வரி குறைப்புக்காக முறைகேடு: 1,000 மின்சார கார்கள் பறிமுதல்
வரி குறைப்புக்காக முறைகேடு: 1,000 மின்சார கார்கள் பறிமுதல்
ADDED : செப் 02, 2025 09:37 AM
கொழும்பு: சீனாவின் பிரபலமான 'பி.ஒய்.டி.,' நிறுவனத்திற்கு சொந்தமான, 1,000 மின்சார வாகனங்களை இலங்கை சுங்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.
உலகில் மின்சார வாகனத் துறையில் முன்னிலையில் உள்ளது, நம் அண்டை நாடான சீனாவைச் சேர்ந்த பி.ஒய்.டி., நிறுவனம். இந்த ஆண்டு பிப்ரவரியில், நம் மற்றொரு அண்டை நாடான இலங்கை, கார் இறக்குமதியை அனுமதித்த பிறகு, பி.ஒய்.டி., நிறுவனம் அங்கு விறுவிறுப்பான விற்பனையை தொடங்கியது.
இந்த நிலையில், கலால் வரியை குறைத்து வழங்குவதற்காக அந்நிறுவனம் முறைகேடு செய்திருப்பது தெரியவந்துள்ளது. 150 கிலோவாட் சக்தி கொண்ட மின்சார வாகனத்தை 100 கிலோவாட் என்று கூறி இறக்குமதி செய்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த ஜூலை மாதம் முதல் தொகுதியாக 1,000 கார்கள் இறக்குமதி செய்யப்பட்டது. ஆனால் வாகனத்தின் மோட்டார் சக்தியைக் குறைத்து மதிப்பிட்டதாக சந்தேகம் எழுந்ததால் அவற்றை இலங்கை சுங்கத்துறை பறிமுதல் செய்து வைத்தது.
சோதனை நிலுவையில் உள்ள கார்களை விடுவிப்பதற்காக, 100 கோடி ரூபாய் வரை வங்கி உத்தரவாதம் வழங்க பி.ஒய்.டி., நிறுவனம் ஒப்புக்கொண்டதை சுங்கத்துறை ஏற்றுக்கொண்டது. இந்தநிலையில், இரண்டாவது தொகுதியாக 1,000 கார்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அதிலும் இயந்திர சக்தி மோசடியாக குறிப்பிடப்பட்டிருக்கலாம் என்பதால் சோதனைக்காக அவற்றை தடுத்து வைத்துள்ளதாக இலங்கை சுங்கத்துறை செய்தித் தொடர்பாளர் சீவலி அருக்கோடா கூறினார்.