Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/பிரிட்டனில் எம்.பி., ஆன தமிழ் பெண்

பிரிட்டனில் எம்.பி., ஆன தமிழ் பெண்

பிரிட்டனில் எம்.பி., ஆன தமிழ் பெண்

பிரிட்டனில் எம்.பி., ஆன தமிழ் பெண்

UPDATED : ஜூலை 05, 2024 01:09 PMADDED : ஜூலை 05, 2024 12:43 PM


Google News
Latest Tamil News
லண்டன்: பிரிட்டனில் நடந்த பொதுத்தேர்தலில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட உமா குமரன் என்ற தமிழ்ப்பெண் வெற்றி பெற்று எம்.பி., ஆகியுள்ளார்.

இவர், அந்நாட்டின் ஸ்டான்போர்ட் அண்ட் பவ் தொகுதியில் தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்டு, 19,145 ஓட்டு பெற்று வெற்றி பெற்றார். இதன் மூலம் பிரிட்டன் பார்லிமென்டிற்கு தேர்வு செய்யப்பட்ட முதல் தமிழ் பெண் என்ற பெருமையை உமா குமாரன் பெற்றுள்ளார். அவருக்கு லண்டன் தமிழ்ச் சமூக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

இலங்கையில் வசித்த இவரது பெற்றோர், போரின் போது லண்டனுக்கு இடம்பெயர்ந்தனர். லண்டனில் பிறந்த உமா குமரன், அரசியல் இளநிலை பட்டம் பெற்றார். 2020 ல் கெய்ர் ஸ்டார்மரின் பார்லிமென்ட் விவகாரங்களுக்கான துணை இயக்குநராக பணியாற்றினார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜோ ஹட்சன் 7.511 ஓட்டுகள் மட்டுமே பெற்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us