Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/உலகை ஆச்சர்யப்படுத்திய ஆபரேஷன் ஸ்பைடர்வெப்; உக்ரைன் தாக்குதலில் ரஷ்யா திணறல்!

உலகை ஆச்சர்யப்படுத்திய ஆபரேஷன் ஸ்பைடர்வெப்; உக்ரைன் தாக்குதலில் ரஷ்யா திணறல்!

உலகை ஆச்சர்யப்படுத்திய ஆபரேஷன் ஸ்பைடர்வெப்; உக்ரைன் தாக்குதலில் ரஷ்யா திணறல்!

உலகை ஆச்சர்யப்படுத்திய ஆபரேஷன் ஸ்பைடர்வெப்; உக்ரைன் தாக்குதலில் ரஷ்யா திணறல்!

UPDATED : ஜூன் 02, 2025 01:25 PMADDED : ஜூன் 02, 2025 12:56 PM


Google News
Latest Tamil News
கீவ்: மூன்று ஆண்டுக்கு மேலாக நடந்து வரும் போரில், இதுவரை இல்லாத அளவுக்கு ரஷ்யா மீது 'ஆபரேஷன் ஸ்பைடர்மேன் வெப்' என்ற பெயரில் உக்ரைன் தாக்குதல் நடத்தி திணறடித்துள்ளது.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா 2022ம் ஆண்டு பிப்ரவரியில் போர் தொடுத்தது. மூன்று ஆண்டுகளைத் தாண்டியும் போர் நீடிக்கிறது. போர் நிறுத்தம் தொடர்பாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால், நிபந்தனைகளுக்கு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஒப்புக்கொள்ளவில்லை.

மூன்று ஆண்டுக்கு மேலாக நடந்து வரும் போரில், இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய தாக்குதலை ரஷ்யா மீது உக்ரைன் நேற்று நடத்தியது. ட்ரோன்கள் வாயிலாக நடத்தப்பட்ட தாக்குதல்களில், ரஷ்யாவின், 40 போர் விமானங்களை உக்ரைன் தகர்த்துள்ளது. இது, இந்த போரில் ரஷ்யாவுக்கு ஏற்பட்டுள்ள மிகப் பெரிய சேதமாக கருதப்படுகிறது.

உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்யா குண்டுவீச்சு தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, உக்ரைன் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. இந்த தாக்குதலில் ரஷ்யாவுக்கு 7 பில்லியன் டாலர் சேதம் ஏற்பட்டுள்ளது என உக்ரைன் அதிகாரிகள் கணித்துள்ளனர். போர் நடக்கும் பகுதிகளை கடந்து, ரஷ்யா நிலப்பரப்பில் நீண்ட துாரத்துக்கு உட்பகுதிக்கு வந்து இந்த தாக்குதல்களை உக்ரைன் ராணுவம் நடத்தியுள்ளது.

மிக நீண்ட தொலைவாக, 4 ஆயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் சைபீரியாவில் ஒரு விமானப்படை தளம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு உக்ரைன் ராணுவம், ட்ரோன்களை ரஷ்யாவுக்குள் லாரிகளில் கடத்திச்சென்று பயன்படுத்தியதாக கண்டறியப்பட்டுள்ளது. இத்தகைய தாக்குதல், ரஷ்யாவில் இதுவரை மேற்கொள்ளப்படாத ஒன்று என்று மேற்கத்திய நாடுகளை சேர்ந்த போர் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதற்கு மிகப் பயங்கரமான பதிலடி தருவதற்கு ரஷ்யா தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது குறித்து ரஷ்ய பாதுகாப்பு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: முர்மான்ஸ்க், இர்குட்ஸ்க், இவானோவோ, ரியாசான் மற்றும் அமுர் பகுதிகளில் உள்ள ஐந்து விமான தளங்கள் மீது உக்ரைன் தாக்குதல்கள் நடத்தியது.

இவானோவோ, ரியாசான் மற்றும் அமுர் விமானநிலையங்கள் மீதான அனைத்து தாக்குதல்களும் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டன. 162 உக்ரைன் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தினோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us