பொருளாதார தடைகளுக்கு எதிராக ஒருமித்த கருத்தில் உள்ளோம்; ரஷ்ய அதிபர் புடின் உறுதி
பொருளாதார தடைகளுக்கு எதிராக ஒருமித்த கருத்தில் உள்ளோம்; ரஷ்ய அதிபர் புடின் உறுதி
பொருளாதார தடைகளுக்கு எதிராக ஒருமித்த கருத்தில் உள்ளோம்; ரஷ்ய அதிபர் புடின் உறுதி
ADDED : செப் 01, 2025 06:05 AM

தியான்ஜிங் : சீனா வந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:
முக்கியமான உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஆதாரங்களை திரட்டுவதில் சீனாவும், ரஷ்யாவும் சிறப்பு கவனம் செலுத்தி வருகின்றன. உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள பிரிக்ஸ் அமைப்பின் திறனை வலுப்படுத்த இரு நாடுகளும் ஒற்றுமையாக இருக்கின்றன. பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் மற்றும் பிற உலக நாடுகளின் வளர்ச்சியை தடுக்கும் பாரபட்சமான சமூக பொருளாதார தடைகளுக்கு எதிராக சீனாவும் எங்கள் நாடும் ஒருமித்த கருத்தில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
நீங்களும் முக்கியம்
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டின் இடையே, மாலத்தீவு அதிபர் முகமது முய்சூவை, சீன அதிபர் ஷீ ஜின்பிங் சந்தித்து பேசினார்.
அவரிடம், “இரு நாடுகளுக்கு இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதன் வாயிலாக, இருதரப்பு உறவு மேலும் ஆழமடையும். மீன் வளம், கடல்சார் அறிவியல் ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளில் மாலத்தீவுடன் பணியாற்ற சீனா தயாராக உள்ளது,” என்றார்.