காரில் நடந்த ஒரு மணி நேர பேச்சுவார்த்தை: புடினை சந்தித்ததில் மகிழ்ச்சி என்கிறார் மோடி
காரில் நடந்த ஒரு மணி நேர பேச்சுவார்த்தை: புடினை சந்தித்ததில் மகிழ்ச்சி என்கிறார் மோடி
காரில் நடந்த ஒரு மணி நேர பேச்சுவார்த்தை: புடினை சந்தித்ததில் மகிழ்ச்சி என்கிறார் மோடி

பீஜிங்: சீனாவில் காரில் இருந்த படியே ரஷ்ய அதிபர் புடின் உடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். ''ரஷ்ய அதிபர் புடினை சந்தித்ததில் மகிழ்ச்சி'' என சமூக வலைதளத்தில் மோடி பதிவிட்டுள்ளார்.
சீனாவின் தியான்ஜினில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நேற்று துவங்கியது. இது இன்று நிறைவு பெறுகிறது. இந்த அமைப்பில் இந்தியா, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், ஈரான், பெலாரஸ் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்கக்கூடாது என்று அமெரிக்கா வலியுறுத்தி வரும் நிலையில், இன்று (செப் 01) ரஷ்ய அதிபர் புடினுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதற்கு, இந்தியா மீது அமெரிக்கா விதித்த 25 சதவீதம் அபராத வரி குறித்து முக்கிய ஆலோசனை நடத்தி உள்ளனர்.
ஒரே காரில் பயணம்
இந்தியா-ரஷ்யா இடையேயான பேச்சுவார்த்தைக்காக, சீனாவின் தியான்ஜினில் பிரதமர் மோடியும், ரஷ்ய அதிபர் புடினும் ஒரே காரில் பயணம் மேற்கொண்டனர். தங்கியிருக்கும் ஹோட்டலில் இருந்து மாநாடு அரங்கிற்கு ஒரே காரில் வந்தனர்.
ஒரு மணி நேர பேச்சு
மாநாட்டு அரங்கத்திற்கு கார் வந்த பிறகும், காரில் இருந்தபடியே இருவரும் 50 நிமிடங்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். கிரெம்ளின் மாளிகை செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், ''இரு தலைவர்கள் காரில் இருந்த படியே ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்'' என குறிப்பிட்டார்.