பாகிஸ்தான் வறுமை விகிதம் 44 சதவீதமாக உயர்வு
பாகிஸ்தான் வறுமை விகிதம் 44 சதவீதமாக உயர்வு
பாகிஸ்தான் வறுமை விகிதம் 44 சதவீதமாக உயர்வு
ADDED : ஜூன் 07, 2025 02:14 AM
இஸ்லாமாபாத்:உலக வங்கி குறைந்த வருவாய் நாடுகளுக்கான வறுமைக்கோட்டு வரம்பை மாற்றியமைத்ததால், பாகிஸ்தானில் வறுமையில் இருப்போர் எண்ணிக்கை 44 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்டனை தலைமையிடமாக வைத்து செயல்படும் உலக வங்கி சமீபத்தில் வறுமைக்கான புதிய வருமான வரம்பை வெளியிட்டது. அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை உயர்வால் இந்த மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.
அதன்படி, குறைந்த நடுத்தர வருவாய் நாடுகளில், தீவிர வறுமைக்கான வருமான வரம்பு நாளொன்றுக்கு 180 ரூபாய் என்பதில் இருந்து, 250 ரூபாயாக உயர்த்தப்பட்டது.
வறுமைக்கான வருமான வரம்பு நாளொன்றுக்கு 300 ரூபாய் என இருந்தது, 350 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
நம் அண்டை நாடான பாகிஸ்தான் குறைந்த நடுத்தர வருவாய் நாடுகளின் பட்டியலில் உள்ளது.
இங்கு உள்ள மக்கள் தொகை எண்ணிக்கை 24 கோடி. தற்போது வறுமைக்கான வருமான வரம்பு உயர்த்தப்பட்டதால், நாட்டில் தீவிர வறுமையில் இருப்போர் எண்ணிக்கை 4.9 சதவீதத்திலிருந்து 16.5 ஆக உயர்ந்தது.
வறுமையில் இருப்போர் எண்ணிக்கை 39.8 சதவீதத்தில் இருந்து 44.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.