பலுசிஸ்தான் விடுதலை அமைப்புக்கு தடை விதிக்கும் பாக்., முயற்சி முறியடிப்பு
பலுசிஸ்தான் விடுதலை அமைப்புக்கு தடை விதிக்கும் பாக்., முயற்சி முறியடிப்பு
பலுசிஸ்தான் விடுதலை அமைப்புக்கு தடை விதிக்கும் பாக்., முயற்சி முறியடிப்பு
ADDED : செப் 20, 2025 07:50 AM

நியூயார்க்: ஐ.நா., சபையில் பலுசிஸ்தான் விடுதலை படைக்கு தடை விதிப்பதற்காக சீனா மற்றும் பாகிஸ்தான் எடுத்த கூட்டு முயற்சிகளை அமெரிக்கா தடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்கானிஸ்தானில் இயங்கி வரும் பயங்கரவாத குழுவான பி.எல்.ஏ., எனப்படும் பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் மற்றும் அதன் தற்கொலை பிரிவான மஜீத் படை பிரிவுகளுக்கு ஐ.நா.,வில் தடை விதிப்பதற்கான நடவடிக்கைகளை சீனா, பாகிஸ்தான் கூட்டாக மேற்கொண்டன.
பாதுகாப்பு கவுன்சில் இம்முயற்சியை அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் தடுத்தன. இந்த இரு பயங்கரவாதக்குழுக்களையும் சமீபத்தில் அமெரிக்கா வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1999ம் ஆண்டின் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் 1267ன் கீழ், அல் குவைதா, தலிபான் மற்றும் ஐ.எஸ்.ஐ.எல்., உடன் தொடர்புடைய தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் மீது பயண தடைகள், சொத்து முடக்கம் மற்றும் ஆயுதத்தடைகள் உள்ளிட்ட தடைகள் விதிக்கப்படுகிறது.
இதுகு றித்து, ஐ.நா.,வுக்கான பாக்., நிரந்தர பிரதிநிதியும், துாதருமான அசிம் இப்திகார் அகமது, “ஐ.எஸ்.ஐ.எல்., - கே, அல் குவைதா, தெஹ்ரிக் - இ - தலிபான் பாகிஸ்தான், பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் மற்றும் இதன் மஜீத் படைப் பிரிவு உள்ளிட்ட பயங்கரவாதக்குழுக்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து எல்லை தாண்டிய தாக் குதல்களை நடத்தி வருகிறது,” என, ஐ.நா., சபையில் தெரிவித்தார்.
இதுகுறித்து, அமெரிக்கா கூறியதாவது:
பி.எல்.ஏ.,வை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அறிவித்திருந்தாலும், இக்குறிப்பிட்ட அமைப்பை ஐ.நா.,வின் தடைசெய்யப்பட்ட குழுவின் பட்டியலில் சேர்க்க போதிய சட்டப்பூர்வ ஆதாரங்கள் இல்லை. குறிப்பாக, அல் குவைதா அல்லது ஐ.எஸ்.ஐ.எல்., உடன் தொடர்புடைய குழுக்களுக்கு மட்டுமே இது பொருந்தும்.
இவ்வாறு கூறியுள்ளது.
பதிலடி இது அமெரிக்காவின் ராஜதந்திர நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானை தளமாகக் கொண்டு இயங்கி வரும் லஷ்கர் - இ - தொய்பா மற்றும் ஜெய்ஷ் - இ - முகமது போன்ற பயங்கரவாத குழுக்களின் தனிநபர்கள் மீது தடை விதிக்க அமெரிக்கா மற்றும் இந்தியா இணைந்து முன்மொழிந்த முயற்சிகளை சீனா பலமுறை தடுத்துள்ளது.
எனவே, பாகிஸ்தானுடன், சீனா கொண்டு வந்த இந்த முயற்சிக்கு, சீனா பயன்படுத்திய அதே யுத்தியை அமெரிக்கா பயன்படுத்தி, பதிலடி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.