சிந்து நதி நீர் பங்கீடு நிறுத்தம் இந்தியாவை கெஞ்சும் பாக்.,
சிந்து நதி நீர் பங்கீடு நிறுத்தம் இந்தியாவை கெஞ்சும் பாக்.,
சிந்து நதி நீர் பங்கீடு நிறுத்தம் இந்தியாவை கெஞ்சும் பாக்.,
ADDED : மே 15, 2025 12:19 AM
இஸ்லாமாபாத்: சிந்து நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் நிறுத்தப்பட்டது தொடர்பாக மறுபரிசீலனை செய்யுமாறு பாகிஸ்தான் அரசு, இந்தியாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, 1960ல் பாகிஸ்தானுடன் மேற்கொள்ளப்பட்ட சிந்து நதிநீர் பங்கீடு ஒப்பந்தத்தை மத்திய அரசு நிறுத்தி வைத்தது. இதன் காரணமாக, அந்நாட்டின் பிரதான நீர் ஆதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே, இருநாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே நிறுத்தப்பட்ட சிந்து நதிநீர் பங்கீடு ஒப்பந்தத்தின் நிலை நீடிக்கும் என மத்திய அரசு திட்டவட்டமாக நேற்று முன்தினம் தெரிவித்தது.
இந்நிலையில், பாகிஸ்தானின் நீர்வளத்துறை, நம் வெளியுறவு அமைச்சகத்துக்கு சமீபத்தில் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில், 'சிந்து நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் நிறுத்தப்பட்டுள்ளதால், எங்கள் நாட்டில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.
'எனவே, இந்திய அரசு, தன் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்து, சிந்து நதிநீர் பங்கீடு ஒப்பந்தத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என, குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.