மாயமான இந்திய மாணவர் அமெரிக்காவில் மர்ம சாவு
மாயமான இந்திய மாணவர் அமெரிக்காவில் மர்ம சாவு
மாயமான இந்திய மாணவர் அமெரிக்காவில் மர்ம சாவு
ADDED : ஜன 31, 2024 12:47 AM

இண்டியானா, அமெரிக்காவில் காணாமல் போன இந்திய மாணவர், நேற்று மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
கணினி அறிவியல்
அமெரிக்காவில் இண்டியானா மாகாணத்தின் பர்ட்யு பல்கலையில், நம் நாட்டின் மஹாராஷ்டிராவைச் சேர்ந்த நீல் ஆச்சார்யா என்ற மாணவர், கணினி அறிவியல் மற்றும் தரவு அறிவியல் படித்து வந்தார்.
இந்நிலையில் அந்த மாணவனின் தாயார் கவுரி, தன் மகன் காணவில்லை என அமெரிக்காவில் உள்ள இந்திய துாதரகத்திற்கு புகார் அளித்தார்.
இதற்கு நம் நாட்டு துாதரகம் தெரிவித்த பதிலில், 'காணாமல் போன மாணவர் நீல் ஆச்சார்யாவின் குடும்பத்தினருடன் தொடர்பில் உள்ளோம்.
'எங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் மேற்கொண்டு வருகிறோம்' என தெரிவிக்கப்பட்டது.
காணாமல் போன மாணவர் குறித்து பல்கலை நிர்வாகம் அளித்த புகாரின்படி போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று பல்கலை அருகே இறந்த நிலையில் ஒரு ஆணின் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அங்கு சென்று பார்த்தபோது, அந்த உடலில் நீல் ஆச்சார்யாவின் அடையாள அட்டை இருந்ததையும், அவரது உடைமைகள் இருப்பதையும் கண்டறிந்தனர்.
ஆழ்ந்த இரங்கல்
அதன்பின் பல்கலை நிர்வாகத்தினர் உதவியுடன், இறந்தது அவர் தான் என்பதை போலீசார் உறுதிப்படுத்தினர்.
இதுதொடர்பாக பல்கலை நிர்வாகத்தினர், நீல் ஆச்சார்யாவின் இறப்புக்கு அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.