Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/ மகன் கையில் நிறுவன கட்டுப்பாடு ஊடக நிறுவனர் மர்டோக் வௌிப்படை

மகன் கையில் நிறுவன கட்டுப்பாடு ஊடக நிறுவனர் மர்டோக் வௌிப்படை

மகன் கையில் நிறுவன கட்டுப்பாடு ஊடக நிறுவனர் மர்டோக் வௌிப்படை

மகன் கையில் நிறுவன கட்டுப்பாடு ஊடக நிறுவனர் மர்டோக் வௌிப்படை

ADDED : செப் 10, 2025 03:33 AM


Google News
Latest Tamil News
நியூயார்க்:அமெரிக்காவின், 'பாக்ஸ் நியூஸ், வால்ஸ்ட்ரீட் ஜர்னல்' போன்ற முன்னணி ஊடக நிறுவனங்களின் முன்னாள் தலைவரான ரூபெர்ட் மர்டோக், 94, அதன் கட்டுப்பாட்டை தன் மூத்த மகன் லாக்லன் மர்டோக்கிற்கு வழங்குவதை நேற்று உறுதி செய்தார்.

அமெரிக்காவின் ரூபெர்ட் மர்டோக் 'பாக்ஸ் கார்ப்பரேஷன்' மற்றும் 'நியூஸ் கார்ப்' ஆகிய இரண்டு நிறுவனங்களின் முன்னாள் தலைவர்.

இந்த இரண்டு நிறுவனத்தின் கீழ், 'பாக்ஸ் நியூஸ், வால் ஸ்ட்ரீட் ஜர்னல், நியூயார்க் போஸ்ட், தி டைம்ஸ்' ஆகிய முன்னணி 'டிவி' மற்றும் பத்திரிகைகள் செயல்படுகின்றன.

இந்த நிறுவனங்களு க்கு வாரிசாக தன் மூத்த மகன் லாக்லனை, கடந்த 2023ல் ரூபெர்ட் மர்டோக் அறிவித்தார். இது தொடர்பாக அவரது குடும்பத்திற்குள் பிரச்னை எழுந்தது.

இரண்டு ஆண்டுகளாக நீடித்து வந்த இந்த பிரச்னைக்கு, தற்போது பேச்சு மூலம் தீர்வு காணப்பட்டுள்ளது. லாக்லனின் சகோதரர்கள் மூன்று பேர் 30,000 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கள் பங்குகளை விட்டுக் கொடுத்தனர்.

அதன்படி, பாக்ஸ் கார்ப்பரேஷன் மற்றும் நியூஸ் கார்ப்பை நிர்வகிக்கும், 'நியூ பேமிலி' அறக்கட்டளையின் 40 சதவீத பங்குகள் லாக்லன் வசமாகின.

இதில், லாக்லனின் இளைய சகோதரியர் கிரேஸ் மற்றும் கிளோய் ஆகியோருக்கும் பங்கு உள்ளது. ஆனால், முடிவெடுக்கும் அதிகாரம் முழுக்க லாக்லன் மர்டோக் வசமே உள்ளது.

மொத்தம், ஐந்து திருமணங்கள் செய்த ரூபெர்ட் மர்டோக்கிற்கு, மூன்று மனைவியர் மூலம், இரண்டு ஆண், நான்கு பெண் குழந்தைகள் உள்ளனர். மர்டோக்கின் மொத்த சொத்து மதிப்பு, 2.13 லட்சம் கோடி ரூபாய் என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us