இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் முறியடிப்பு ஏமனின் ஹவுதிக்கு எச்சரிக்கை
இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் முறியடிப்பு ஏமனின் ஹவுதிக்கு எச்சரிக்கை
இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் முறியடிப்பு ஏமனின் ஹவுதிக்கு எச்சரிக்கை
ADDED : ஜூன் 29, 2025 11:14 AM
ஜெருசலேம்: ஏமனில் இருந்து செயல்படும் ஹவுதி பயங்கரவாத அமைப்பு நடத்திய ஏவுகணை தாக்குதல்களை முறியடித்த இஸ்ரேல், இது தொடர்ந்தால் கடும் பதிலடியை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளது.
மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீன பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே கடந்த 2023 அக்டோபரில் போர் துவங்கியது. இதில், ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு, ஈரான் ஆதரவு பெற்ற ஏமனை சேர்ந்த ஹவுதி பயங்கரவாத அமைப்பு ஆதரவு தெரிவித்தது.
இஸ்ரேல் மீதும், செங்கடல் பகுதிகளில் அமெரிக்காவின் சரக்கு கப்பல்கள் மீதும் ஹவுதி பயங்கரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தினர்.
இஸ்ரேல் - ஈரான் இடையேயான மோதல்கள் சமீபத்தில் நிறுத்தப்பட்டன. இந்நிலையில், ஏமனில் இருந்து டஜன் கணக்கான ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் இஸ்ரேலுக்கு எதிராக ஹவுதி பயங்கரவாதிகள் ஏவினர்.
இவற்றை நடுவானிலேயே இடைமறித்து அழித்ததாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. இதுபோன்ற தாக்குதல்கள் தொடர்ந்தால், ஹவுதி பயங்கரவாதிகள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என இஸ்ரேல் எச்சரித்துள்ளது.